ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் மூலம் 2019 உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி கண்டெடுத்த 2   வீரர்கள்

Ravi Shastri - Tough times ahead for the Indian Head Coach
Ravi Shastri - Tough times ahead for the Indian Head Coach

#1 ரவீந்திர ஜடேஜா

Jadeja - The multifaceted cricketer whom India would not wish to miss
Jadeja - The multifaceted cricketer whom India would not wish to miss

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5ல் 4 ஒருநாள் போட்டி ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கியது. ஹைதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் சிறப்பான எகானமிக்கல் பந்துவீச்சின்(10-0-33-0) மூலம் 236 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை மடக்கியது இந்திய அணி.

நாக்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் அடித்தார். தோனியுடன் சேர்ந்து 67 ரன்கள் அடித்து இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார். கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்திய அணி 200 ரன்களுக்கும் குறைவாகவே ரன்களை அடித்திருந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. சிறிது நேரம் தனது கேப்டனுடன் கைகோர்த்து விளையாடினார் ஜடேஜா. இவர் 40 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை குவித்தார்.

பௌலிங்கில் 10 ஓவர்களை வீசி 48 ரன்களை அளித்து ஷான் மார்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். 2வது ஒருநாள் போட்டியில் ஃபில்டிங்கில் ஜடேஜா பங்களிப்பு அதிகமாக இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பீட்டர் ஹான்ட்ஸ்கோம்-ஐ ரன்- அவுட் செய்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆட்டத்தின் நிலைமை மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.

ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இவரது பௌலிகில் அதிக ரன்கள் சென்றது. பேட்டிங்கில் 24 ரன்களை விளாசினார். 4வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இவர் டெல்லியில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 10 ஓவர்களை வீசி 45 ரன்களை தன் பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவரது சீரான ஆட்டத்திறனால் இந்திய அணியில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் தனது பங்களிப்பை அளிக்கும் திறமை படைத்துள்ளார் ஜடேஜா.

Quick Links

Edited by Fambeat Tamil