விவோ ஐபிஎல் 2019 - ஒரு முன்னோட்டம் 

IPL CUP 2018
IPL CUP 2018

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளால் இப்போதே இணையம் கலை கட்ட தொடங்கி விட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் பங்கேற்றது. அது மட்டுமல்லாமல் இம்முறை போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கான வீரர்களை வாங்கின.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடக்கும்?

அடுத்த வருடம், 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்ததை போன்று பொதுத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் தொடர் இந்தியாவில் நடப்பது சந்தேகமாகவே உள்ளது. போட்டி அட்டவணைகள் இன்னும் சரியாக வெளியாகாத நிலையில் அதற்கான முயற்சியில் ஐபிஎல் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ஐபிஎல் 2019 வெளிநாட்டில் நடப்பதற்கான சாத்தியமே அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

CSK Fans
CSK Fans

ஒருவேளை தொடர் முழுதும் வெளிநாட்டில் நடைபெறும் பட்சத்தில் ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைப்பது தொடர்பான விஷயங்களில் சிறிது ஏமாற்றம் அடையலாம். ஆனாலும் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த அணி மற்றும் வீரர்களின் ஆட்டத்தைக் காண எந்த ஒரு எல்லைக்கும் போவார்கள் என அனைவரும் அறிந்ததே.

ஐபிஎல் ஏலம் 2018:

2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏலத்தில் 123 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 350 வீரர்கள் பங்கேற்றனர். நான்கு சுற்றுகளாக நடந்த ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில வீரர்கள் அதிர்ஷ்டவசமாக அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் சிலர் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

IPL Auction 2019
IPL Auction 2019

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

இம்முறையும் வெற்றி பெறும் நோக்கத்தோடு களமிறங்கும் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வீரர்களை மட்டும் வாங்கியுள்ளது. தோனி ,ரெய்னா,வாட்சன்,பிராவோ போன்ற அனுபவம் மிக்க வீரர்களுடன் மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது.அணியில் 11 பேர் இருந்தாலும் டோனியை மையமாக வைத்து தான் ஆட்டங்களின் வியூகங்கள் வகுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

CSK 2018- Ipl Champion
CSK 2018- Ipl Champion

பிற அணிகள் :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மொத்தம் 13 வீரர்களை வாங்கியுள்ளது.இதனால் அணியில் மிகப் பெரும் மாற்றம் இருக்கும் என நம்பலாம். கிறிஸ் கெயில் , கேஎல் ராகுல் , அஷ்வினுடன் ஐபிஎல்-லில் இவ்வருடம் அதிக பட்ச ஏலம் போன வருண் சக்கரவர்த்தி, சாம் கர்ரான், முகம்மது ஷமி ஆகியோரும் கைகோர்க்கின்றனர். இது நடக்கும் பட்சத்தில் இந்த அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.

இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் புதிய வீரர்களை வாங்கியுள்ளது. கோஹ்லியின் தலைமையில் களமிறங்கும் அணி கடந்த சில ஐபிஎல்-களில் குறிப்பிடப்படும் படியான ஆட்டங்களை வெளிப்படுத்தவில்லை எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலம் பொருந்தியவையாகவே உள்ளன.

IPL
IPL

கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் அணியில் ஜோனி பெர்ஸ்டாவை தவிர குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. கடந்த முறை சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் மலிங்கா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை எடுத்து மேலும் வலு சேர்த்துள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ்:

கடந்த ஐபிஎல் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடிய டெல்லி அணி டெல்லி கேபிட்டல்ஸ் என பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியும் போதுமான மாற்றங்களை செய்துள்ளது.கிட்டத்தட்ட பதினேழு கோடி ரூபாயை செலவு செய்து அந்த அணியை மெருகேற்றியுள்ளது.வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஆல் ரவுண்டர் அக்சார் படேல் , காலின் இங்கிராம் அணியில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்

1.ஜெயதேவ் உனட்கட் - 8.4 கோடி

2. வருண் சக்கரவர்த்தி - 8.4 கோடி

3.சாம் கரான் - 7.2 கோடி

4.காலின் இங்ராம் -6.4 கோடி

5.சிவம் டுபே - 5 கோடி

ஏலம் போகாத வீரர்கள்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தின் பிரண்டன் மெகல்லம், கோரி ஆண்டர்சன் , ஆஸ்திரேலியாவின் ஆடம் சம்பா மற்றும் ஷான் மார்ஷ் , இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா மற்றும் டேல் ஸ்டெயின், இலங்கையின் ஏஞ்சலோ மாத்தியூஸ் ஆகியோர் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

இந்திய வீரர்களில் மனோஜ் திவாரி, நமன் ஓஜா ,சாஹிர் கான் , புஜாரா, ராகுல் சர்மா, சச்சின் பேபி, மனன் வோரா போன்றோரும் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

ஐபிஎல் எனும் கொண்டாட்டம்

அனல் பறக்கும் ஆட்டங்கள், விசில் சத்தங்கள், நடன பெண்கள் , ரசிகர்களின் கரவோசைகள், கூச்சல்கள் என வரும் ஐபிஎல் நமக்கு ஒரு கொண்டாட்டமே ! இத்தனைக்கும் மத்தியில் ஐபிஎல் 2019 தொடக்க விழா முதல் இறுதி போட்டி வரை காண ஆவலாக உள்ளீர்களா? நானும் உங்களுடன் ! உங்கள் மனங்கவர்ந்த அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்களுடன்..வெல்லட்டும் நம் அணி ....