2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ள வாய்ப்புள்ள இரு மாற்றங்கள்

Rishabh Pant and Dinesh Karthik might feature in the playing XI for India
Rishabh Pant and Dinesh Karthik might feature in the playing XI for India

2019 உலகக்கோப்பை தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே அரையிறுதிக்கான தனது இடத்தை உறுதி செய்து விட்ட நிலையில் 6 அணிகள் மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மட்டுமே தற்போது வரை உலகக்கோப்பையில் தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது. தற்போது புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

இந்திய அணி நாளை எட்ஜ்பாஸ்டோன் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி தனது கடைசி இரு லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றாலே அரையிறுதியை உறுதி செய்து விடும். இங்கிலாந்து - இந்தியா மோதும் போட்டி மிக்க ஆரவாரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே போட்டியை வெல்லும் நோக்கில் உள்ளது. இங்கிலாந்து இப்போட்டியில் வெல்வதைப் பொறுத்தே அதன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

மான்செஸ்டரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தியது. இருப்பினும் பேட்டிங்கில் சில தடுமாற்றங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது.‌ ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் இந்திய அணி ஆடும் XIல் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நாம் இங்கு இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள இரு மாற்றங்களை பற்றி காண்போம்.


#1 விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் ஃபண்ட்

Rishabh pant
Rishabh pant

ஒரு நிலையான ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணியின் மிடில் ஆர்டரை சரி செய்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தனக்களித்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் மோசமாக பேட்டிங்கில் சொதப்பினார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் நம்பர்-4 பேட்டிங் வரிசையில் நன்றாக வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் மிகக்குறைந்த ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அதேபோல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த போட்டியில் கேமார் ரோச்சிடமிருந்து சிறப்பான பந்து வெளிபட்டு வந்தது. அப்போட்டியிலும் விஜய் சங்கருக்கு நம்பர்-4 வரிசையில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் சிறப்பாக ஆரம்பித்து மோசமான முறையில் விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணி தொடர்ந்து இரு போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் சொதப்பி உள்ளனர். எனவே இந்திய அணி விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்டை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்க முயற்சிக்கும். ரிஷப் பண்ட் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது பேட்டிங்கை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். எனவே இனிவரும் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் X-காரணியாக திகழும் இவர் கண்டிப்பாக மிடில் ஓவரில் இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். உலகக்கோப்பையின் இறுதி கட்டத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை ரிஷப் பண்ட் கண்டிப்பாக சரியாக பயன்படுத்தி கொள்வார். கேப்டனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மிகப்பெரிய இலக்கை இந்தியா சேஸ் செய்யும்போது அதிக பந்துகளை எதிர்கொண்டு அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர் ரிஷப் பண்ட்.

#2 கேதார் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்

Karthik has usually done well for India in the ICC events
Karthik has usually done well for India in the ICC events

கேதார் ஜாதவ் இவ்வுலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியை தவீர மற்ற போட்டிகளில் சரியான பங்களிப்பை அளிக்கத் தவறியுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவருக்கு அளித்த சில வாய்ப்புகளையும் கேதார் ஜாதவ் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானிற்கு எதிரான மெதுவான மற்றும் பொறுப்பான இன்னிங்ஸை தவிர மற்ற போட்டிகளில் கடைநிலையில் ஆரம்ப பந்திலிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிவிட்டனர்.

தற்போது உள்ள நிலையில் கேதார் ஜாதவின் பேட்டிங் கடைநிலையில் அவ்வளவு ஏதுவாக இருக்க வாய்ப்பில்லை. தடுமாறி வரும் கேதார் ஜாதவிற்கு தினேஷ் கார்த்திக் ஒரு சரியான மாற்று வீரராக இருப்பார். அத்துடன் ஒவ்வொரு அணிக்கும் கடைநிலையில் ஒரு ஹிட்டர் பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா அந்த இடத்தில் இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு ஆதரவாக நிலைத்து நிற்க ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் அந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார்.

தனது சிறப்பான அனுபவத்தின் மூலம் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக இருந்துள்ளார். இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம்பர் 6 பேட்டிங் வரிசையில் தான் எதிர்கொள்ளும் ஆரம்ப பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டையும் சம அளவில் எதிர்கொள்ளும் திறமை கொண்டவராக தினேஷ் கார்த்திக் உள்ளதால் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் களம் காண வாய்ப்புள்ளது.

Quick Links