2019 உலகக்கோப்பை: ஹாரிஸ் சோஹைல் இவ்வளவு நாள் தன் சிறப்பான ஆட்டத்தை எங்கு வைத்திருந்தார் ?

Pakistan v South Africa - ICC Cricket World Cup 2019
Pakistan v South Africa - ICC Cricket World Cup 2019

ஒரு போட்டியில் எதிரணியால் அடித்து நொருக்கப்பட்டு அடுத்த போட்டியில் மற்றொரு அணியுடன் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கத்தை குறிக்கோள்களாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சிறப்பான அணியாக உருவெடுத்துள்ளது.

இந்த வெற்றியின் கட்டமைப்பாளர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டிக்கும் பிறகு ஓரங்கட்டப்பட்ட "ஹாரிஸ் சோஹைல்" ஆவார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஆரம்பத்தில் தனது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டத்தால் ஒரு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் பாகிஸ்தான் டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஒரு பெரிய ரன் குவிப்பில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹாரிஸ் சோஹைல் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சமாளித்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை அளித்தார்.

ஒரு அதிரடியான பௌலிங்கிற்கு எதிராக ஹாரிஸ் சோஹைல் சில சிறப்பான ஷாட்களை அடித்து துவைத்தார். தன்னால் அடிக்க முடியும் என்ற பௌலிங்கை மட்டும் சரியாக தேர்வு செய்து அதனை பயன்படுத்தி கொண்டு ஹாரிஸ் சோஹைல் விளையாடியது அனைவரையும் கவர்ந்தது. ஷார்ட் பந்து, ஃபுல் அல்லது மிதவேக பந்து போன்றவற்றை பவுண்டரிகளாக மாற்றினார்.

சோஹைல் மொத்தமாக 59 பந்துகளுக்கு 89 ரன்களை விளாசினார், இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது. இதுவே இந்த ஆடுகளத்தில் வெற்றி பெறுவதற்கான ரன்களாக இருந்தது. இம்ரான் தாஹுர் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தினார். ஆனால் மற்ற பௌலர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை கணித்து சீராக சவால் அளிக்கும் விதத்தில் பந்துவீசவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸில் டிகாக் மற்றும் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஒரு நிலையான பார்டனர் ஷீப் அமைத்து தன் ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினார்கள். ஆனால் இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்தப்பட்ட பின்னர் தென்னாப்பிரிக்காவின் முடிவு சுவற்றில் எழுதப்பட்டது.

முகமது அமீர் சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தினார். ஷதாப் கான் ஒரு சிறந்த நம்பிக்கையுடன் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். வஹாப் ரியாஜ் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் டெத் ஓவரில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

தற்போது தென் ஆப்ரிக்க அணி அதிகாரபூர்வமாக 2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது, பாகிஸ்தான் அணிக்கு இனிவரும் போட்டிகளில் வென்றால் டாப் 4க்கு முன்னேற சிறிய வாய்ப்புள்ளது. ஒரு வலிமையான தென்னாப்பிரிக்கா அணி காயம் காரணமாக மோசமாக தடுமாறியது. அத்துடன் மோசமான ஆட்டத்தை உலகக்கோப்பையில் வெளிபடுத்தி அந்த அணியின் மீதிருந்த அதிகபடியான எதிர்பார்ப்புகளை தென்னாப்பிரிக்கா கெடுத்துக் கொண்டது. பாகிஸ்தான் இனி விளையாட உள்ள மூன்று போட்டிகளுமே மிக முக்கியமான மற்றும் நெருக்கடியான போட்டிகள். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றால் கண்டிப்பாக டாப் 4 இடத்திற்கு பெரும் நெருக்கடி உண்டாகும்.

கடைசியாக ஹாரிஸ் சோஹைல் பற்றி சில வார்த்தைகள், இவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் உடற்திறனை வைத்து அதிக நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இவரது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி கிரிக்கெட்டில் தனது அறிவுத்திறன் மற்றும் மனநிலையை வைத்து பாகிஸ்தானை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் திறனை கொண்டுள்ளதாக ஹாரிஸ் சோஹைல் நிருபித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் ஒரு X-காரணியாக இவர் உள்ளார்.

ஜனவரி 2018ற்துப் பின்னர் காயத்திலிருந்து மீண்டு வந்த ஹாரிஸ் சோஹைல் 14 போட்டிகளில் பங்கேற்று 53.58 சராசரியுடன் 643 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். இந்த ஆட்டத்திறன் சீராக இல்லை என்றால், வேறு எவ்வாறு சீரான ஆட்டம் இருக்கும்? இவர் தனது பேட்டிங்கில் மேலும் அதிகப்படியான ரன்களை பாகிஸ்தானிற்கு அளிக்க வேண்டும். அத்துடன் தனது உடற்தகுதியையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

பாகிஸ்தானின் ஃபீல்டிங் மோசமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதிகப்படியான கேட்சுகளை மிஸ் செய்துள்ளது. வேறு அணியாக இருந்தால் கண்டிப்பாக இதற்கு தண்டனைகளை அளித்திருக்கும். உலகக்கோப்பை தொடர்களில் ஃபீல்டிங் மிக முக்கியமான ஒன்றாகும். பாகிஸ்தான் தனது வெற்றிகளுக்கு மேலும் அதிகம் உழைக்க வேண்டும்.

Quick Links

Edited by Fambeat Tamil