உலகக்கோப்பை 2019 : ஆட்டம் 14, இந்திய vs ஆஸ்திரேலியா - போட்டி விவரங்கள், முக்கிய வீரர்கள், ஆடும் 11. 

CWC19 -INDIA VS AUSTRALIA
CWC19 -INDIA VS AUSTRALIA

இந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 13 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 14வது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதனால் இவர்களுக்கு இடையேயான போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டு முறையும் இந்திய அணி ஒரு முறையும் விளையாடியுள்ளது. இரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.

போட்டி விவரங்கள் : இந்திய vs ஆஸ்திரேலிய

தேதி: 9 ஜூன் (ஞாயிறு)

எங்கே : இங்கிலாந்து, லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

எப்போ : நேரம்: 10:30 AM (இங்கிலாந்து), 03:00 PM (இந்தியா) மற்றும் 07.30 PM (ஆஸ்திரேலியா).

கென்னிங்கடன் ஓவல் மைதானம் : 1845 ஆம் ஆண்டு இந்த மைதானத்தை நிறுவப்பட்டது. இந்த மைதானத்தின் கொள்ளவு 25,500 ஆக இருக்கிறது. இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு அமையும். எனவே நாளை சிறந்த பவுலிங் மேட்சை எதிர்பார்க்கலாம்.

வானிலை நிலவரம் :

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை காலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் 10% மட்டும் தான் மழை பெய்ய வாய்ப்புண்டு. வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட புள்ளிவிவரம் :

1.ஒட்டுமொத்த:

மொத்த போட்டிகளில் விளையாடியது - 136

இந்தியா- 49 வெற்றி

ஆஸ்திரேலியா- 77 வெற்றி

முடிவு அற்ற - 10

2.CWC இல்:

மொத்த போட்டிகள் விளையாடியது- 11

இந்தியா- 03 வெற்றி

ஆஸ்திரேலியா- 08

3.இங்கிலாந்தில்:

மொத்த போட்டிகள் - 03

இந்தியா- 01

ஆஸ்திரேலியா- 02

#1.இந்திய அணி

CWC19 - INDIAN CRICKET TEAM
CWC19 - INDIAN CRICKET TEAM

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்க்கு எதிரான விளையாடிய போது ரோகித் சர்மா அதிரடி பேட்டிங்கில் 122 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். பவுலிங்கில் பும்ரா 2 விக்கெட்களையும் யு.சாஹல் 4 விக்கெட்களையும் பெற்றார்கள். தோனி அணிந்திருந்த கையுரையில் இராணுவ முத்திரையை அகற்ற வேண்டும் ஐசிசி வலியறுத்தியது. நாளைய போட்டியில் அந்த கையுரையுடன் தோனி விளையாடுவாரா இல்லையா என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய வீரர்கள் :

பேட்டிங் - ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல்

பவுலிங் - பும்ரா, புவனேஷ்வர் குமார், யு.சாஹல், ஹர்திக் பாண்டியா

எதிர்பார்க்கப்படும் 11 :

ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூ.சாஹல், புவனேஸ்வர் குமார், ஜாஸ்ரிட் பும்ரா.

#2. ஆஸ்திரேலியா அணி

Cwc19 - AUSTRALIA CRICKET TEAM
Cwc19 - AUSTRALIA CRICKET TEAM

கடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வீரர்களான வார்னர் 89, அரோன் பிஞ்ச் 66, நாதன் கொல்டர் நைல் 92 ரன்கள் என பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 6, பாட் கம்மின்ஸ் 5, ஆடம் சாம்பா 4 விக்கெட்களை பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிறது.

முக்கிய வீரர்கள் :

பேட்டிங் - வார்னர், பிஞ்ச், நாதன் கொல்ரனடர் நைல்

பவுலிங் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா

எதிர்பார்க்கப்படும் 11 :

அரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட்), நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா

Quick Links