2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்

Indian Team
Indian Team

இந்தியா

Rohit & KL
Rohit & KL

1) ஒரு உலகக்கோப்பை தொடரில் 4 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் ரோஹீத் சர்மா. 2015 உலகக்கோப்பை தொடரில் இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா 4 சதங்களை விளாசியுள்ளார்.

2) உலகக்கோப்பை வரலாற்றில் ரோஹீத் சர்மாவின் 5வது சதம் இதுவாகும். ரோஹீத் சர்மா உலகக்கோப்பை வரலாற்றில் 5 சதங்களை குவித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), குமார் சங்கக்காரா (இலங்கை) ஆகியோர் முதல் மூன்று பேட்ஸ்மேன்களாக இச்சாதனை பட்டியலில் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்பையில் 6 சதங்களை விளாசியுள்ளார்.

3) உலகக்கோப்பை போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிராக இரு சதங்களை விளாசிய முதல் வீரர் ரோகித் சர்மா. இப்போட்டியில் வந்த சதத்திற்கு (104 ரன்கள்) முன்னதாக, 2015 உலகக்கோப்பை தொடரில் மெல்போர்னில் நடந்த காலிறுதியில் 137 ரன்கள் ரோஹீத் சர்மா அடித்துள்ளார்.

4) 2019 உலகக்கோப்பை தொடரில் ரோஹீத் சர்மா 544 ரன்களை குவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்களை ஒருமுறை விளாசியுள்ளார்.

5) இந்திய பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல் மற்றும் ரோஹீத் சர்மா 180 ரன்கள் தொடக்க பார்டனர் ஷீப் செய்து இப்போட்டியில் விளையாடினர். உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் அதிகபட்ச தொடக்க பார்டனர்ஷீப் இதுவாகும். இதற்கு முன் 2015 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்திற்கு எதிராக ரோஹீத் சர்மா மற்றும் ஷீகார் தவான் 174 ரன்கள் தொடக்க பார்டனர் ஷீப் செய்து விளையாடியதே முந்தைய சாதனையாக இருந்தது.

6) இந்த 180 ரன்கள் பார்ட்னர் ஷீப் ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது அதிகபட்ச பார்டனர் ஷீப்பாகும். இதற்கு முன் வரிசையில் உள்ள இரு பார்டனர் ஷீப்களாவன, 2014ல் நடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது விக்கெட்டிற்கு அஜீன்க்யா ரஹானே மற்றும் விராட் கோலியின் 214 ரன்கள் மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது விக்கெட்டிற்கு விரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலியின் 204 பார்டனர் ஷீப்கள் அதிகபட்சமாக உள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil