உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் அதிக வயது வரை விளையாடியுள்ள 3 வீரர்கள்

Imran Tahir is the oldest player playing in the 2019 Cricket World Cup
Imran Tahir is the oldest player playing in the 2019 Cricket World Cup

உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் நீண்ட கால கனவாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக்கோப்பை தொடரில் ஒருமுறையாவது பங்கேற்று விட வேண்டும் என்று இருக்கும். இந்த தொடரில் உலகின் அனைத்து டாப் கிரிக்கெட் நாடுகளும் பங்குபெறும். இத்தொடரில் பங்கேற்க வயது வித்தியாசம் என ஏதுமில்லை, எனவே ஒரு அணியில் பல இளம் மற்றும் வயது மிகுந்த வீரர்களும் இடம்பெற்றிருப்பர்.

சில வீரர்கள் அதிர்ஷ்டத்தின் மூலம் தனது வயது முதிர்சியிலும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். சிலர் தங்களது உலகக்கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருந்தும் இடம்பெற்றுள்ளனர். சில வீரர்கள் தங்களது இளம் வயதிலேயே உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்று அதிக உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் வாய்ப்பையும் பெற்று வரலாற்றில் தங்களது பெயரை பதிந்திருப்பர்.

நாம் இங்கு தங்களது அதிக வயதில் உலகக்கோப்பையில் விளையாடிய 3 வீரர்கள் பற்றி காண்போம்.

#3 குராம் கான் - 43 வருடங்கள் 262 நாட்கள்

Khurram Khan represented the United Arab Emirates in the 2015 World Cup
Khurram Khan represented the United Arab Emirates in the 2015 World Cup

ஐக்கிய அரபு அமீரக அணியின் ஆல்-ரவுண்டன் குராம் கான், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வயதில் விளையாடிய 3வது வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார். தனது 43வது வயதில் உலகக்கோப்பை தொடரில் அறிமுகமானார். இத்தொடரில் குராம் கான் குழு சுற்றின் 6 போட்டிகளிலும் இடம்பெற்றிருந்தார். இவர் 2004ல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

தனது முதல் சதத்தினை விளாச 11 வருடங்கள் எடுத்துக் கொண்டார். 2019 உலகக்கோப்பை தகுதி சுற்று தொடரில் தனது 43வது வயதில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தினை விளாசி சாதனை படைத்தார். பாகிஸ்தானில் பிறந்த இவர் 10 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். குரோம் கான் தனது கடைசி சர்வதேச போட்டியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 43 வயதாக இருக்கும் போது விளையாடியுள்ளார்.

தனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் 5 ரன்கள் மட்டுமே இவரால் அடிக்க முடிந்தது. இதுவே இவரது இறுதி ஒருநாள் போட்டியாகவும் இருந்தது.

#2 ஜான் டிரைக்கோஸ் - 44 ஆண்டுகள் 302 நாட்கள்

John Traicos was born in the year 1947!
John Traicos was born in the year 1947!

ஜான் டிரைக்கோஸ் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றிருந்தார். டிரைக்கோஸ் தென்னாப்பிரிக்கா சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் 1970-ழ் ஆண்டு அறிமுகமானார். உலகில் இரு அணிகளுக்காக விளையாடியுள்ள சில வீரர்களில் ஜான் டிரைக்கோஸிம் ஒருவராவார். ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஆஃப் ஸ்பின்னர் ஜான் டிரைக்கோஸ் பிறந்த இடம் எகிப்து. ஆனால் இவர் ஜீம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை செய்யப்பட்டதிற்கு முன்னர் 3 போட்டிகளில் ஜான் டிரைக்கோஸ் வானவில் நாட்டிற்காக (தென்னாப்பிரிக்கா) விளையாடியுள்ளார். பின்னர் ஜீம்பாப்வே அணியில் இடம்பெற்றிருந்தார்‌. 1983 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் ஜீம்பாப்வே அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஜான் டிரைக்கோமிற்கு 44 வயது இருக்கும் போது 1992 உலகக்கோப்பை தொடரில் ஜீம்பாப்வே அணிக்காக களமிறங்கி சாதனை படைத்தார்.

அந்த உலகக்கோப்பை முடிந்தும் ஜீம்பாப்வே அணிக்காக விளையாடி வந்த அவர் 1993ல் ஓய்வு பெற்றார்.

#1 நோலன் கிளார்க் - 47 வயது 257 நாட்கள்

Nolan Clarke (2nd from right) is the oldest man to play in the Cricket World Cup
Nolan Clarke (2nd from right) is the oldest man to play in the Cricket World Cup

நோலன் கிளார்க் 1996 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்காக 5 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக பங்கேற்றார். 1996ல் பிப்ரவரி 26 அன்று நடந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அறிமுகமானார். 1996, ஏப்ரல் 5 அன்று நியூசிலாந்திற்கு எதிரான தனது இறுதிப்போட்டியில் விளையாடினார். 1996ல் தான் உலகக்கோப்பையில் நெதர்லாந்து முதல் முறையாக பங்கேற்றது. பார்படாஸில் பிறந்த நோலன் கிளார்க் நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார்.

நோலன் கிளார்க் தனது 47வது வயதில் உலகக்கோப்பை தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் ஜான் டிரைக்கோஸின், அதிக வயதில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. இவர் மிகப்பெரிய ஹிட்டர். உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்று 10 சராசரியுடன் 50 ரன்களை விளாசியுள்ளார். நோலன் ஹாங்காங்கின் சூப்பர் 6 தொடரிலும் பங்கேற்றிருந்தார். அத்தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

1996 உலகக்கோப்பை தொடருக்கு நெதர்லாந்து தகுதி பெற்றதற்கு முன்னணி காரணமாக இருந்தவர் நோலன் கிளார்க். 1994 ஐசிசி கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக பிளே ஆஃப் சுற்றில் பெர்முடாவிற்கு எதிராக 121 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2005 அன்று தனது 56 வயதில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இவர் நெதர்லாந்தில் மிகப்பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஆம்ஸ்டர்டேமில் நடக்கும் "ஹோப்டிக்கிளாஸி" என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி 782 ரன்களை குவித்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நெதர்லாந்து இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராக உள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil