ஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்கள்

ஐ.பி.எல். ஏலம்
ஐ.பி.எல். ஏலம்

ஐபிஎல் ஏலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் பல அறிவிப்பு, வதந்திகள் மற்றும் முன்னறிவிப்புகள் வலம்வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் ஏலம் முடிவுற்றதால் அணி வீரர்கள் மற்றும் மற்ற கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது.

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் பற்றிய கருத்துகள் தற்போது ட்ரெண்ட்ங்கில் உள்ளது. மேலும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து இதுவும் அதிகம் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது. இப்போது, ஐபிஎல் தொடரில் முதன் முறையாக, தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்களைப் பற்றி நாம் விவாதிக்கலாம்.

# 3 லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)

லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)
லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் வீரராக களமிறங்க உள்ளார். இதுவரை 110 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2009-ஆம் ஆண்டு முதல் 2017 வரை அவர் மும்பையில் இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 110 ஆட்டங்களில், மலிங்கா 154 விக்கெட்டுகள், 19.06 என்ற சராசரி, 6.89 எகனாமி ரேட் கொண்டு உள்ளார்.

2011-ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 28 விக்கெட்டுகளை எடுத்தார். அவர், ஊதா தொப்பியையும் அந்த தொடரில் பெற்றார். எனினும், அந்த ஆண்டு கோப்பையை சென்னை சூப்பர் கிங்க்ஸ் பெற்றது.

# 2 கரோன் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)

கரோன் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
கரோன் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் கரோன் போலார்ட். மேற்கிந்திய தீவு அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர ஐ.பி.எல் தொடரில் வேறு அணியில் இடம் பெறாதவர். இதுவரை 132 போட்டிகளில், பொல்லார்ட் 28.15 சராசரி, 2,477 ரன்களை எடுத்ததுடன் 145 ஸ்ட்ரைக் ரேட் பெற்றார். பந்து வீச்சில் 56 விக்கெட்களையும் எடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.

2018 ஆம் ஆண்டில் மறந்துவிடக்கூடிய ஆண்டாக இவருக்கு இருந்தாலும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொலார்ட் ஆதரவு அளித்துள்ளனர். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பொலார்ட் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

# 1 விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

ஐ.பி.எல். தொடரில் ஒரே அணியில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் 163 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 38.36 சராசரி, 4,948 ரன்களையும் எட்டியுள்ளார். 130 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார்.

2016-ல் தனது அணிக்கு கிட்டத்தட்ட 900 ரன்களை எட்டியபோது, தனது அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பை பெரும் வாய்ப்பை தவறவிட்டார். வரும் தொடரில் ஒரு வலுவான திறன்கொண்ட வீரர்களை அணியில் இடம் பெற வைத்து கோப்பையை பெரும் முனைப்பில் உள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil