விராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய 3 திறன்கள்

Virat Kohli
Virat Kohli

ஒவ்வொரு தலைமுறையிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமாகி கொண்டிருப்பார்கள். அதுபோல நடப்பு தலைமுறையில் ஸ்டீவன் ஸ்மித், பாபர் அஸாம், ஜோ ரூட், கனே வில்லியம்சன் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் மேற்குறிப்பிட்ட வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிப்பவர், விராட் கோலி. ஆனால் விராட் கோலி தனக்கு நிகர் தானே என்று பல முறை நிரூபித்துள்ளார். அனைத்து 3 தரப்பிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி எதிரணியின் பந்துவீச்சை திறம்பட கையாண்டு அவற்றையெல்லாம் பாடங்களாக மாற்றி சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த சராசரி, அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீரர், 8000, 9000 மற்றும் 10000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர், டி20 போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என இவரது சாதனைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 30 வயதான விராட் கோலி, 2019 உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசியிருப்பினும் ஒரு சதம் கூட விளாசாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆனால், அந்த ஏமாற்றத்தில் இருந்து மீட்டெடுக்கும் விதமாக நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களை இது குதூகாலப்படுத்தியுள்ளார்.

youtube-cover

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தனது மாஸ்டர் கிளாஸ் ஷாட்கள் மூலம் கவர்ந்துள்ளார், விராட் கோலி. எனவே, இவரை உலகின் தலை சிறந்த வீரராக உருவாக்குவதற்கு காரணமாய் அமைந்த 3 திறன்களை இந்தப் பட்டியல் விவரிக்கின்றது.

#1.மிகச்சிறந்த இலக்குகளை தேர்வுசெய்ய்யும் விராட் கோலி:

Kohli displaying his passion for the game
Kohli displaying his passion for the game

சர்வதேச போட்டியில் விராட் கோலிக்கு நிகராக வேறு எந்த வீரரும் விளையாடவில்லை. கனே வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித் போன்ற தரமான வீரர்கள் இருப்பினும் அவர்கள் அனைவரையும் அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளிப்பதில்லை. எனவே, உலகின் தலை சிறந்த வீரனாக தம்மை மாற்ற மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைந்து வருகிறார், விராட் கோலி. எந்த ஒரு பணியையும் அவர் சுலபமாக செய்து முடித்துவிட இல்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே டிரைவ் வித ஷாட்களை மேற்கொள்ளும் விராட் கோலி, பலமுறை அத்தகைய ஷாட்களை மேற்கொண்டதால் ஸ்டம்ப்களை பறிகொடுத்து ஆட்டம் இழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சோதனைகளை எல்லாம் மீட்டெடுத்து இதில் இருந்து கற்ற பாடத்தை தற்போது சாதனையாக மாற்றி வருகிறார், விராட் கோலி. கிரிக்கெட் போட்டிகள் நாளுக்குநாள் தன்னை மெருகேற்றி வருவது போல விராத் கோலியும் எதிரணியின் பந்துவீச்சை எதிர் கொண்டு தனது ஆதிக்கத்தினை மேலோங்கி செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக சதங்களை காணும் கோலி தமது ஆட்ட திறனில் சிறிதும் தொய்வின்றி செயல்பட்டு வருகிறார். உண்மையில், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து காணப்படுகிறார். இதன் காரணமாகவே, தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அனைத்திற்கும் உச்சம் சென்ற பின்னரும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் பல சாதனைகளை புரியும் நோக்கத்தில் விராத் கோலி தம்மை ஈடுபடுத்தி வருகிறார்.

#2.மிகுந்த விழிப்புணர்வும் இடைவெளியை கண்டு ஷாட்களை தேர்வுசெய்யும் விராட் கோலி:

Kohli at the crease against South Africa
Kohli at the crease against South Africa

கிரிக்கெட் போட்டிகளுக்கு விராட் கோலி கிளம்பி விட்டால் தனது ஆக்ரோஷமான பாணியை கையாளுகிறார். பொதுவாக மைதானங்களில் ரசிகர்களின் மனநிலை, வேலைப்பளு மற்றும் மிகுந்த ஒலியை ஏற்படுத்தும் பலவித காரணங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரன்களைக் கூட குவிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தன் பேட்டாலயே போராட்டத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்ட விராட் கோலி, அவ்வப்போது நடைபெற்றிருக்கும் போட்டியின் கள நிலவரத்தையும் விரைவிலேயே உணர்ந்து அணிக்கு தேவைப்படும் பங்களிப்பினை மிகச்சிறப்பாக ஆற்றி வருகிறார். ஒவ்வொரு பத்து வீசுவதற்கு இடையே காணப்படும் நேரங்களில் ஃபீல்டிங்கை நன்கு அறிந்து கேப்களை தேர்வு செய்து ஷாட்களை அடிக்கும் வல்லவராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இவ்வகையான விழிப்புணர்வு கொண்டதால் அத்தகைய ஷாட்கள் பவுண்டரிகளாக மாறி விடுகின்றன. ஆஃப் மற்றும் லெக் திசை என எதுவாக இருப்பினும், விராட் கோலி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றவாறு பந்தனை திருப்பி விடுகிறார். 2019 உலக கோப்பை தொடரிலும் கூட இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சில அசாத்தியமான பவுண்டரிகளை அடித்து 66 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, தனது அபார பேட்டிங் திறன் மூலம் பந்தினை கவர் திசையில் திருப்பி அவற்றை பவுண்டரிகளாக மாற்றி எதிரணி ஃபீல்டர்களை நிலைகுலைய வைக்கிறார். இதுபோன்ற ஆட்ட விழிப்புணர்வு மற்றும் தகுந்த கேப்களை கண்டு பந்தை திருப்பி விடும் திறன் ஆகியவற்றில் விராட் கோலி புத்திசாலியாக திகழ்ந்து வருகிறார்.

#3. மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறந்த செயலாக்கம்:

The most important reason behind Virat Kohli’s success is his versatility. 
The most important reason behind Virat Kohli’s success is his versatility.

தகுந்த செயலாக்கமே விராட் கோலியின் வெற்றிக்கு முதல் மற்றும் முக்கிய காரணமாக அமைகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 போட்டிகளிலும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 77 ஆட்டங்களில் பங்கேற்று 53.76 என்ற பேட்டிங் சராசரி உடன் 25 சதங்களை விளாசியுள்ளார், விராத் கோலி. ஆட்டத்தின் தொடக்கம் இன்னிங்ஸ் முதல் நான்காம் இன்னிங்ஸ் வரையிலுமே சுலபமாக பேட்டிங்கை கையாண்டு பல்வேறு முறை இந்திய அணிக்காக வெற்றிகளையும் தேடித் தந்துள்ளார். அடுத்ததாக, ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் விளங்கும் விராட் கோலி, 59.40 என்ற பேட்டிங் சராசரியிம் மூலம் மலைக்க வைக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் சரி ஒரு நாள் போட்டிகளிலும் சரி இவர் வைத்துள்ள பேட்டிங் சராசரி 50க்கும் மேல் தான். ஆனால், டி20 போட்டிகளில் 50 என்ற சராசரியை தொட நூலிழை வித்தியாசம் மட்டுமே விராத் கோலியிடம் காணப்படுகிறது. ஆனாலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார், விராட் கோலி. இதன் காரணமாகவே அனைத்து மூன்று தரப்பிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னிலை வகிக்கும் விராட் கோலி, இத்தலைமுறையின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேனாகவே திகழ்ந்து வருகிறார்.

Quick Links

Edited by Fambeat Tamil