உலக கோப்பை வரலாற்றில் சிறந்த 4 இன்னிங்ஸ்கள்

Hayden & ponting
Hayden & ponting

#எம்.எஸ்.தோனி : 91 நாட் அவுட் vs இலங்கை , 2011 உலகக் கோப்பை

MS Dhoni
MS Dhoni

தோனி 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பு வரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது இல்லை. அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் இலங்கையை தவிர எந்த அணியும் சிறப்பாக சேஸிங் செய்தது கிடையாது.ஆனால் தோனி இந்த சரித்திரத்தை திருத்தி எழுதி இந்திய அணியை 2011 உலகச் சேம்பியன் ஆகச் செய்தார்.

இந்தியா 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் நிறைந்த வலிமையான இலங்கை அணியை எதிர்கொண்டது. 275 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 114 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் தோனி , யுவராஜ் சிங்கிற்கு முன்வரிசை பேட்டிங்கில் களமிறங்கினார்.

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆவலுடன் போட்டி இறுதி வரை பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். தோனி மற்றும் கௌதம் காம்பிருடன் வலது இடது பேட்டிங் காம்பினேஷனுடன் களமிறங்கி விளையாடி வந்தனர். இலங்கை அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பௌலிங்கை சிறப்பாக கையாண்டார். 3 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருவரும் விளையாடி வந்ததால் சிறப்பாக இவரது பௌலிங்கை எதிர் கொண்டார். கௌதம் காம்பிர் 97 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் - தோனியுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார்.

தோனியின் சிறப்பான ஆட்டத்திறன் மூலம் 91 ரன்களை இறுதிப் போட்டியில் குவித்தார். அத்துடன் ஆட்டத்தின் வெற்றியை சிக்ஸ் அடித்து முடித்து வைத்தார். மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் தோனியின் ஆட்டத்தை கண் இமைக்காமல் இறுதி வரை‌ பார்த்து வந்தனர்.

கௌதம் காம்பிரின் சிறப்பான ஆட்டமும் 2011 உலகக் கோப்பை வெல்ல மிகவும் உதவியாக இருந்தது. கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் உலகக் கோப்பை வெல்லும் 23 வருட கணவு 2011-ம் ஆண்டு அன்று நனவானது.

Quick Links