#ரிக்கி பாண்டிங் : 140 vs இந்தியா , 2003 உலகக்கோப்பை
2003 உலகக் கோப்பையில் ஷேன் வார்னேவிற்கு ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை வெல்லாது என அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஆஸ்திரெலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த முடிவை மாற்றியமைத்தார். ரிக்கி பாண்டிங் எப்போதும் கிரிக்கெட்டில் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடுடன் செயல்படுவார். இத்தகைய குணங்களால் தான் ரிக்கி பாண்டிங் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார் .
2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி எந்த லீக் போட்டிகளிலும் தோற்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் 2003 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியை எதிர் கொண்டது ஆஸ்திரேலிய அணி .
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சவ்ரவ் கங்குலி பௌலிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பேட்டிங்கில் அசத்தி வந்தது.
ரிக்கி பாண்டிங் நிதானமாக விளையாடி 121 பந்துகளில் 140 ரன்களை விளாசினார். இவர் இப்போட்டியில் தனது முதல் 50 ரன்களை அடிக்க 75 பந்துகளை எதிர்கொண்டார்.அதன்பின் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி தனது 3-வது உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.