உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விரேந்தர் சேவாக் ஒரு சிறந்த ஆட்டக்காரராக திகழந்துள்ளது அனைவரும் அறிந்ததே. "மாஸ்டர் பிளாஸ்டர்" என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையில் 2000ற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள ஒரே பேட்ஸ்மேன் ஆவார். 6 உலகக் கோப்பை தொடர்களில் 45 போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் 56.95 சராசரியுடன் 2278 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
1999 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரிஸ்டோலில் நடந்ல போட்டியில் தனது உணர்ச்சிகரமான சதத்தை கென்யாவிற்கு எதிராக விளாசினார். இந்த போட்டிக்கு முந்தைய நாள் அவரது தந்தை காலமானார். 2003 உலகக் கோப்பையில் வக்கார் யூனிஷ், வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற அதிரடி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 98 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் நடையை கட்டியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 120 ரன்களை சச்சின் குவித்தது போன்றவை ஐசிசி நடத்தும் திருவிழாவில் சச்சின் செய்துள்ள மகத்தான சாதனைகளாகும்.
இந்தக் கட்டுரையில் உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களால் சச்சின் டெண்டுல்கர் தவறவிட்ட 4 சதங்களை பற்றி காண்போம்:
81 (91 பந்துகள்) vs ஜீம்பாப்வே (2003 உலகக் கோப்பை)
சச்சின் டெண்டுல்கர் இந்தப்போட்டியில் சிறப்பான ஷாட்களை அடித்து விளையாடினார். ஃப்ரிஸ்டின் ஃபிலிக்ஸ், கட் & புல் ட்ரைவ், மற்றும் சில அற்புதமான ஷாட்கள் இந்தப்போட்டியில் குறிப்பிடத்தக்கவைகளாக இருந்தது.
சச்சின் டெண்டுல்கர் சதம் விளாசும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இவர் 81 ரன்களில் இருந்த போது கிரான்ட் ஃபிளவர் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . நேராக சற்று மேல் நோக்கி நடு ஸ்டம்பிற்கு வந்த பந்தை அடிக்க முற்பட்டார் சச்சின். ஆனால் பந்து பேட்டில் படாமல் நேராக வலது புற ஸ்டம்பில் அடித்தது. இதனால் சச்சின் 81 ரன்களுடன் சதம் விளாச முடியாமல் வெளியேறினார்.
83 (101 பந்துகள்) vs கென்யா (2003 உலகக் கோப்பை)
சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்திறனுடன் திகழ்ந்தார். 2003 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கென்யாவிற்கு எதிராக மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 270 என்ற அற்புதமான இலக்கை கென்யாவிற்கு நிர்ணயித்தது. அத்துடன் 91 ரன்களில் கென்யாவை சுருட்டி சாதனை சாதனை படைத்தது இந்திய அணி.
இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றுமொருமுறை சச்சின் டெண்டுல்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சச்சின் 83 ரன்களில் இருந்த போது கென்யா கேப்டன் ஸ்டிவ் டிக்கோலோ வீசிய ஷார்ட் பந்தை ஃபுல் ஷாட்டாக அடித்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த பந்து இடது புற மூலையில் இருந்த ஃபீல்டரிடம் சென்று கேட்ச் பிடிக்கப்பட்டது. இதனால் 2003 உலகக்கோப்பை சீசனில் இரண்டாவது முறையாக தனது சதத்தினை அருகில் சென்று நழுவ விட்டார்.