அசாதாரண காரணங்களால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன 5 வீரர்கள்

ஆரோன் பிஞ்ச்
ஆரோன் பிஞ்ச்

ஒரு வீரருக்கு போட்டியில் பங்கேற்க முடியாமல் போக பல காரணங்கள் இருக்க கூடும். சில பேர் காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கு பெற முடியாமல் போகும். சிலர் உடல் நலம் சரி இல்லாத காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகிக்கொள்வர். தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு அணி நிர்வாகமும் முக்கியமான வீரர்களுக்கு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கின்றனர். இந்த ஓய்வால் வீரர்கள் நல்ல பயிற்சி எடுப்பதோடு குடுபத்துடன் நேரங்களை ஒதுக்கி புத்துணர்ச்சி அடைகின்றனர். ஆனால் இது எல்லா வீரர்களுக்கும் பொருந்தும் என கூற முடியாது. நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் ஓய்வு அளிக்கப்பட்டாலும், அதற்கு அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடி தங்கள் திறமையை நிலைநாட்டுவர். சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட பிறகு கலந்து கொள்ளும் தொடரில் தனது பார்மை இழந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் கூடும். இந்த பதிவில் நாம் காணவிருப்பது வழக்கத்தை சற்று வித்தியாசமான ஒன்று. அசாதாரண காரணங்களுக்காக ஒரு வீரர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#5 ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

2008ம் ஆண்டு பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இரண்டு போட்டிகளுக்கு நடுவே போதிய இடைவெளி கொடுக்கப்படும். சில நேரங்களில் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு சென்று விளையாட நேரிடும். ஆதலால் வீரர்களுக்கு நல்ல ஓய்வும் போதிய பயிற்சியும் தேவை. இந்த ஓய்வை சரிவர வீரர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை அணியின் நிர்வாகம் உற்று கவனிக்கும். கொடுக்கப்படும் ஓய்வு நாளில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்று விட்டார். திடீரென ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவசர ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தில் இவரால் பங்கேற்க முடியாமல் மீன் பிடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை காரணம் காட்டி அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய நிர்வாகம் இவரது வாய்ப்பை பறித்தது.

இதே போன்று 2005ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு தொடரில் மயக்கநிலை காரணமாக ஒரு போட்டியில் இவர் பங்கேற்க முடியாமல் போனது. இவரது கிரிக்கெட் வாழ்வில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மற்றும் சில ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கி அணியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளார்.

#4 கவுதம் கம்பிர்

கவுதம் கம்பிர் 
கவுதம் கம்பிர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான இவர், தன் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பங்கேற்க சென்றதால் ஒரு போட்டி விளையாட முடியாமல் போனது. இந்த நிகழ்வு 2009ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை இடையான ஒருநாள் தொடரின் போது அரங்கேறியது. கவுதம் கம்பிர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இதை பற்றி முறையாக கடிதம் அனுப்பினார். கடிதத்தில் அவர் கூறியதாவது - என்னுடைய சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் 3 வது ஒருநாள் போட்டியில் எனக்கு ஓய்வு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார். அணி நிர்வாகமும் இதனை படித்துவிட்டு முறையான காரணம் என்பதால் கம்பிரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது.

#3 மேத்யூ ஹேடன்

மேத்யூ ஹேடன்
மேத்யூ ஹேடன்

2006ம் ஆண்டு நடைபெற்ற ஷெஃபீல்ட் ஷீல்டு உள்ளூர் போட்டியின் போது பௌன்சர் பந்தை எதிர்கொள்ளும் போது விரலில் அடிபட்டு முறிவு ஏற்பட்டது. இந்த மாதிரி காயம் என்பது சகஜம். ஆனால் இதற்கு அடுத்த போட்டியில் ரன் எடுக்கும் பொழுது காலில் நாய் கடித்ததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதன் பிறகு காயத்தில் இருந்து மீண்ட ஹேடன் ஆஷஸ் தொடரில் கலந்துகொண்டு 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்த காரணமாக இருந்தார்.

இதனை பற்றி தனியார் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது - "இந்த வாரமே எனக்கு சரியாக அமையவில்லை. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. நாய் கடியால் விஷம் ஏறியது. நல்ல சிகிச்சை எடுத்துக்கொன்டேன் " என குறிப்பிட்டார்.

#2 ஆரோன் பிஞ்ச்

ஆரோன் பிஞ்ச்
ஆரோன் பிஞ்ச்

இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதிற்கான காரணம் பலருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக இவர் பங்கேற்றார். ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு விளையாட சென்ற பிஞ்ச், இவரது கிரிக்கெட் அணிகலன்கள் உள்ள பை வராத காரணத்தால் இவருக்கு பதிலாக இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் கூறுகையில், "ஆரோன் பிஞ்ச்ன் ஸ்பான்சர்கள் அவர் வேறு பேட்டை கொண்டு ஆட சம்மதிக்க மறுத்த காரணத்தால் அணியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலை வந்தது" என குறிப்பிட்டார்.

#1 சிட்னி பர்ன்ஸ்

சிட்னி பர்ன்ஸ்
சிட்னி பர்ன்ஸ்

இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுள் ஒருவரான இவர், 1920-21ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல நேர்ந்தது. சிட்னி பர்ன்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தையை உடன் அழைத்து செல்ல அனுமதி கேட்டு ஆஸ்திரேலியா நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். இதனை ஏற்றுக்கொள்ளாத நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் இருந்து விலகுவதாக பர்ன்ஸ் அறிவித்தார்.