பந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..
கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் பல வீரர்கள் முதலில் தங்களது சிறந்த பௌலிங் அல்லது பேட்டிங் திறமையை கொண்டே அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சில பந்துவீச்சாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஒரு சில பேட்டிங் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி முழுநேர பேட்ஸ்மேனாகவே மாறிவிடுகின்றனர். தற்போது ஆஷஸ் தொடரில் அசத்திவரும் ஸ்டீவன் ஸ்மித் தனது ஆரம்ப காலங்களில் ஆஸ்திரேலிய அணிக்காக பந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மானாக மாறியுள்ளார். அந்தவகையில் பந்துவீச்சாளராக தங்களது அணிக்கு அறிமுகமாகி பின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வீரர்களின் பட்டியலில் பீட்டர்சன் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். ஆனால் அப்போது அவர் அணியில் பந்துவீச்சாளராகவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த தொடரில் இவரது பேட்டிங் அனைவரையும் கவர்ந்தது. பிரெட் லீ மற்றும் வார்னே போன்ற பந்துவீச்சாளர்களை இவர் கையாண்ட விதம் மிகவும் அருமையயாக இருந்தது இவரை முழு நேர பேட்ஸ்மேனாக மாற காரணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அதே ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இவரது அபார ஆட்டம் இவரால் லிமிட்டெட் ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என நிருபித்தார். அதன் பின் இவரை அனைத்துவித போட்டிகளிலும் பேட்ஸ்மேனாகவே மாற்றியது அணி நிர்வாகம். சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமான இவர் பந்துவீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. 10 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் பந்துவீசிய இவர் மொத்தமே 20 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார். ஆனால் பேட்டிங்-ல் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் 8181 ரன்களும், 136 ஒருநாள் போட்டிகளில் 4440 ரன்களும் குவித்துள்ளார்.
#4) நாஸிர் உசேன்
நாஸிர் உசேன் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். இவரும் சுழல் பந்து வீச்சாளராகவே தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கினார். கேப்டனாக இவர் அணியை வழிநடத்தும் போது பொறுப்பினை ஏற்று பேட்ஸ்மானாகவும் தன்னை மாற்றிக்கொண்டார். இவரின் சிறந்த பேட்டிங் திறன் இவரை அணியில் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவே மாற்றியது. இவர் தனது பந்துவீச்சின் மூலமும் பல சாதனைகள் படைத்துள்ளார். இவர் தனது 15 வயதிலேயே முதல்தர போட்டிகளுக்கு பந்துவீச்சாளராக தேர்வுசெய்யப்பட்டார். 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5764 ரன்களும், 88 ஒருநாள் போட்டிகளில் 2332 ரன்களும் குவித்துள்ளார்.
#3) கேமரூன் ஒயிட்
2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் ஒயிட் ஆஸ்திரேலிய அணி சார்பாக பந்துவீச்சாளராக அறிமுகமானார். ஆனால் இவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருந்தார். இருந்தாலும் இவரின் அதிரடி ஆட்டத்திறன் இவரை அணிக்கு பேட்ஸ்மானாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது. தனது அதிரடியான ஆட்டத்தால் அணிக்கு பல ரன்களை குவித்தார் இவர். இதுவரை 88 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 2037 ரன்கள் குவித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 35.