கிரிக்கெட் வீரர்கள் களத்தில் அழுது மனதை உருக்கிய அந்த ஐந்து நிகழ்வுகள்

Enter caption

பெரும்பாலான நாடுகளில் கிரிக்கெட் என்பது ஒரு முக்கியமான விளையாட்டாக கருதப்படுகிறது.இதற்காக நிறைய பேர் அடிமையாகியுள்ளனர்.களத்தில் விளையாடும் வீரர்களுக்கு பார்வையாளர்கள் தரும் உற்சாகம் அவர்களை மேலும் மெருகேற்றுகிறது.களத்தில் நடக்கும் ஏற்றம் இறக்கம், பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் உணர்ச்சி வெளிப்பாடு போன்றவை கிரிக்கெட் விளையாட்டை மேலும் ரசிக்க வைக்கிறது.

களத்தில் மோதும் இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருப்பின் அந்த போட்டி ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதிரடியாகவே இருக்கும்.சில சமயங்களில் நூலிலையில் வெற்றி கைமாறும்.அப்பொழுது வீரர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் களத்திலேயே காண்பித்து விடுவார்கள்.அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி,சோகமாக இருந்தாலும் சரி.அப்படிப்பட்ட 5 நிகழ்வுகளைதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

#1.ஷகிப் அல் ஆசன்

11-ஆவது ஆசியக்கோப்பை வங்கதேசத்தில் நடந்தது.வங்கதேசம் லீக் போட்டிகளில் இந்தியா & பாகிஸ்தான் அணிகளை வென்று ஆசியகோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் வங்க தேசம் டாஸ் வென்று ஃபில்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேசம் தனது முதல் ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் சரியில்லை,ஹபிஸ் மற்றும் சர்ப்ரஸ் அகமது மட்டுமே 40 ரன்களை தாண்டினர்.மற்ற பேட்ஸ்மேன்கள் தன் பங்கிற்கு 30 ரன்களுக்குள்ளாக அடித்தனர்.பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 236 ரன்கள் எடுத்து.பின்னர் களமிறங்கிய வங்கதேசம் தொடக்கம் நிலைத்து ஆடி 81 ரன்கள் சேர்த்தனர்.நிஜாமுதின் விக்கெட் இழப்பிற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.4வதாக களமிறங்கிய ஷகிப் அல் ஆசன் நிலைத்து நின்று 68 ரன்களை சேர்த்தார்.அவருடைய விக்கெட்டிற்கு பிறகு வந்த வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்.இறுதியில் பாகிஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது ஆசியக் கோப்பையை வென்றது.

வங்கதேசத்தின் ஆசியக்கோப்பை கனவு கனவாகவே போனது.கோப்பை நூழிலையில் பறிபோனதை ஷகிப் அல் ஆசன் மற்றும் சக வீரர்களால் தாங்க முடியவில்லை.இதனால் களத்திலேயே தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

#2.ஶ்ரீ சாந்த்

Enter caption

2008 ஐபிஎல் சீசனில் 10வது போட்டி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக அமைந்தது.ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை அணியும் யுவராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் அணியும் மொகாலியில் உள்ள பித்ரா மைதானத்தில் மோதின.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20ஓவர் முடிவில் 182 ரன்களை சேர்த்தது.பஞ்சாப் அணியில் குமார் சங்கக்காரா அதிகபட்சமாக 94 ரன்களை குவித்தார்.பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டியின் முடிவில் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மும்பை அணியின் கேப்டனை ஒருசில வார்த்தைகளால் விமர்சித்தார்.ஏற்கனவே அணியின் தொதப்பல்களால் கோபமாக இருந்த ஹர்பஜன் சிங் ‌ஸ்ரீசாந்த்தை ஓங்கி கண்ணத்தில் அறைந்தார்.இதனால் ஸ்ரீசாந்த் கண்ணில் பயத்துடன் அழுதுவிட்டார்.

#3.விராட் கோலி

Enter caption

4வது T20 உலகக்கோப்பையில் குருப் ஸ்டேஜில் இந்தியா தனது குழுவில் முதல் அணியாக இருந்ததால் நேரடியாக சூப்பர் 8ற்கு தகுதி பெற்றது.பின் இந்தியாவின் சுமாரான ஆட்டத்தால் ஒரு வெற்றி & ஒரு தோல்வியை பெற்றிருந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவிற்கெதிரான போட்டி இந்திய அணியின் அரையிறுதியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று ஃபில்டிங்கை தேர்வு செய்தது.ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்காவிற்கு இது சம்பிரதாய போட்டியாக இருந்தது.ஆனால் இந்தியாவிற்கு இப்போட்டியில் எதிரனியை 121 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் அரையிறுதிக்கு செல்லும் போட்டியாக இருந்தது.

அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ரெய்னாவை(45) தவிர யாரும் 30ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை.தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை

#4.தென்னாப்பிரிக்க அணி

Enter caption

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அனைத்து உலகக்கோப்பையின் மிக முக்கியமான(காலிறுதி, அரையிறுதி) போட்டிகளில் வெளியேறிவிடும் என்ற மோசமான சாதனையை வைத்துள்ளது.அணியின் செயல்பாடு முக்கியமான போட்டிகளில் நன்றாக இருக்காது.2015 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் அரையிறுதிப்போட்டியிலும் வழக்கம்போல் தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது . தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்கார்களை நியூசிலாந்தின் டிரேன்ட் போல்ட் தனது மின்னல் வேக பந்துவீச்சில் சொற்ப்ப ரன்களில் வெளியேற்றினார்.வழக்கம்போல் மூன்றாவதாக களமிறங்கிய டுயூபிளஸ்ஸி நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டார்.ஏ.பி.டிவில்லியர்ஸ் அவருக்கு மறுபுறம் நின்று நல்ல கூட்டணியை கொடுத்தார்.

டேவிட் மில்லர் 18 பந்துகளில் 49 ரன்களை வெழுத்துவாங்கியபோது மழை குறுக்கிட்டது.மழையினால் 43 ஓவருடன் முடித்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருந்தது.டக் வொர்த் லிவிஸ் முறைப்படி 298 ரன்கள் நியூசிலாந்திற்கு இலக்காக தரப்பட்டது.

அரையிறுதிப் போட்டியில் 298 இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டில் மற்றும் மெக்கல்லம் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் சேர்த்தனர்.மெக்கல்லம் மற்றும் கானே வில்லியம்சன் சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.டெய்லர் மற்றும் கப்டில் சற்று நிலைத்து ஆடினர்.

கோரி ஆண்டர்சன் & கிரான்ட் எலியாட் போட்டியை அதிரடியாக முடித்து வைத்தனர்.கோரி ஆண்டர்சன் ஒரு அற்புதமான அரை சதத்தை அடித்தார்.கிரான்ட் எலியாட் 73 பந்துகளில் 84ரன்களை விளாசி தன் வாழ்நாளில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்றும் டேல்ஸ்டெயின் வீசிய கடைசிக்கு முந்தைய பாலில் சிக்சரை விளாசி 2015 உலகக்கோப்பை ஃபைனலில் நுழைந்தது நியூசிலாந்து

ஐசிசி போட்டிகளில் அரையிறுதியில் வெளியேறும் சோதனை மற்றுமொன்றாக இப்போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு அமைந்தது.ஸ்டேய்ன்,டுயூபிளஸ்ஸி,ஏபி டிவில்லியர்ஸ் கண்களில் கண்ணீரோடும் பயத்தோடும் மைதானத்தில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

#5.யுவராஜ்சிங் & ஹர்பஜன் சிங்

<p>Enter caption

2011 உலகக்கோப்பையில் இந்தியா ஒரு சிறந்த அணியாகவும் ,நல்ல வழிகாட்டியுடனும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.களத்தில் அனல் பறக்கும் போட்டியாகும் அமைந்தது.இந்த நாளில் இந்தியா 28 வருடங்களுக்கு பிறகு 1996 சேம்பியன் இலங்கையை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை மும்பை வான்கடே மைதானத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செயத இலங்கைக்கு ஆரம்பம் முதலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் இந்திய பந்துவீச்சாளர் ஜாஹிர் கான்.அவர் வீசிய முதல் 5 ஓவரில் 3 மெய்டன் மற்றும் உபுல் தரங்காவின் விக்கெட் ஆகியவற்றை செய்து அசத்தினார். ஜெயவர்த்தனே மட்டும் நன்றாக கணித்து விளையாடி சதத்தினை விளாசினார்.இறுதியில் இவர் மட்டுமே இலங்கை பக்கம் அதிக ரன்களை குவித்தார். இலங்கை 50 ஓவர் முடிவில் 274 ரன்களை குவித்தது.

இந்தியா 50 ஓவரில் 275 ரன்களை சேர்த்து தனது இரண்டாவது உலகக்கோப்பையை கைப்பற்றும் என்ற நோக்கில் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.இந்திய தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தனது இரண்டாவது பாலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்த சில நிமிடங்களில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கரும் தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா 32ற்கு 2விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

சச்சின் விக்கெட்டிற்கு பிறகு கோலி மற்றும் காம்பீர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.பிறகு தில்சான் வீசிய பந்தில் கோலி பொளரிடமே கேட்ச் ஆனார்.அதன் பின் இந்திய கேப்டன் அணி வரிசையில் 4வதாக களமிறங்கி காம்பிருடன் கைகோர்த்து 109ரன்களை சேர்த்தனர்.

காம்பிர் 97ல் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால் ஆட்டத்தை முடித்து வைக்கும் பொறுப்பு தோனி மற்றும் யுவராஜ் வசம் வந்தது.தோனி சவாலை ஏற்று கடைசி ஓவரின் முந்தைய ஓவரில் இரண்டாவது பாலை சிக்சர் அடித்து 2011 உலகக்கோப்பையை 28 வருடங்களுக்கு பிறகு இந்திய வசமாக்கினார்.

இந்திய வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் மைதானத்தை நோக்கி ஓடிவந்தனர்.அனைவரும் தமது உணர்வுகளை களத்தில் ஆனந்த கண்ணீராக வெளிப்படுத்தினர்.முக்கியமாக யுவராஜ் சிங் & ஹர்பஜன் சிங் களத்தில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது & தொடர் ஆட்ட நாயகன் விருதினை தங்களது அற்புதமான ஆட்டத்தால் வென்றனர்.இந்திய அணியின் வீரர்கள் அணியின் கூட்டு முயற்சி மற்றும் நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்டு கோப்பையை வென்றனர்.

Quick Links

Edited by Pritam Sharma