கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் உடல் தகுதியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனாலே இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் தகுதி பெறுவதற்கு யோ யோ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியை போல தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் நிலை கிரிக்கெட் போட்டிகளில் இல்லாவிட்டாலும் பீல்டிங் செய்யும் போது மற்றும் பேட்டிங் செய்யும் போதும் வேகமாக ஓடுவது அவசியமாகிறது. எனவே சிறப்பாக ஓடக்கூடிய வீரர்களுக்கே அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தவகையில் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக ஓடக்கூடிய டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#5) முகமது கைப்
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த பீல்டராக கருதப்படுபவர் கைப். இவரின் அசத்திய பீல்டிங் திறமையால் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. பந்து எந்தப்பக்கம் சென்றாலும் அதனை பாய்ந்து லாவகமாக பிடிக்கும் தன்மை கொண்டவர் இவர். இதனாலே இவர் இருக்கும் திசையில் பந்தினை அடிக்க பேட்ஸ்மேன்கள் அஞ்சுவர். அந்தளவுக்கு வேகமான பீல்டராக திகழ்ந்தார் இவர். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் கலக்கிய இவருக்கு இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் கிடைக்கிறது.
#4) ஏபி டிவில்லியர்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங், பீல்டிங் என அதிலும் அசத்துவார் . இவரின் அசத்திய திறமையினால் பல கடினமான கேட்ச்களை பிடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வேகமாக ரன் எடுக்க இவரின் ஓட்டமும் இவரை இந்த பட்டியலில் இணைத்துள்ளது. இந்தாண்டு நடந்துமுடிந்த உலககோப்பை தொடரில் இவர் கலக்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இவர் திடீரென சர்வதேச போட்டிகளிலிருந்தது தனது ஓய்வினை அறிவித்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். இவரை போன்ற உடலை வற்புறுத்தி விளையாடும் வீரர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவது என்பது அரிது தான்.
#3) விராட் கோலி
இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி இந்த பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இவர். இதற்க்கு முக்கிய காரணம் இவரின் மின்னல் வேக ஓட்டமே. இவர் பீல்டிங்கில் சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைவிட பேட்டிங் செய்யும் போது இவர் மிக வேகமாக ஓடக்கூடியவர். மற்ற வீரர்கள் ஒரு ரன் மட்டுமே எடுக்க கூடிய பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து விடுவார் இவர். சர்வதேச போட்டிகளில் இவர் அதிகமாக பௌண்டரிகள் விளாசா விட்டாலும் இரண்டு மற்றும் மூன்று என ரன்கள் ஓடியே வேகமாக ரன்களை சேகரிப்பார் . எவ்வளவு ரன்கள் ஓடினாலும் சளைக்காமல் இருப்பதே இவரின் பெரிய பலம். இவரின் இந்த அதிவேக ஓட்டத்திறனே இன்றளவும் சிறந்த வீரராக இருக்க முக்கிய காரணமாக திகழ்கிறது.