சச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராத் கோலி
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராத் கோலி

டியர் விராத்,

நீங்கள் இப்போது நவீன கால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்னாக வலம் வந்து கொண்டு உள்ளீர்கள். எந்தப் பந்து வீச்சும் உங்களை வீழ்த்த முடியவில்லை. ஒவ்வொரு எதிர்ப்பையும், சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஏற்கனவே 10,000 ரன்களையும், 39 சதங்களும் அடித்து அசத்தியுள்ளீர்கள்.

ஆனால், விராத் நான் உங்கள் பேட்டிங்கை பார்த்து அனுபவிக்க முடியவில்லை. அது உங்கள் சொந்த தவறு இல்லை.

2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நீங்கள் வருவதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு மனிதர் என்னைச் சிறைபிடித்து வைத்திருந்தார்.

உண்மையில் சச்சின் பேட்டிங் பார்த்து வளர்ந்தாலும் கூட, அவரைப் போல் ஆக விரும்புவதா, அது சரியானதா?

ஒரு ரசிகனாக சச்சினுக்கு தனது இதயத்தை வழங்கிவிட்ட பிறகு, ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன்னாக விளையாடிய பிறகு, டெண்டுல்கர் என்ற அந்த மனிதர் பிடியிலிருந்து வேறு எந்த பேட்ஸ்மேனையும் கற்பனை செய்வது மிகவும் கடினம்.

1994-ஆம் ஆண்டு ஆக்லாந்தில் காலை நேரம் டெண்டுல்கர் 20 வயதாக இருந்த போது, 49 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். அந்த நாட்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

அதற்கு பின்னர் நிச்சயமாக 1998-ஆம் ஆண்டு எல்லா காலத்திற்கும் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணியை கதிகலங்க வைத்தார். ஷேன் வார்ன் அதிர்ச்சியடைந்தார், மைக்கேல் கஸ்பரோயிஸ் முற்றிலும் அசந்து போனார். வர்ணனையாளரான டோனி கிரேக் அவரது குரலில் உணர்ச்சிவசப்பட்டு “என்ன ஒரு வீரர்” என்று அசந்து போனார்.

நீங்கள் அந்த நேரத்தில் 10 வயதாக இருந்தீர்கள். நீங்கள் விராத் அல்லவா? அதனால் நீங்கள் அந்த ஆட்டத்தின் மூலம் வசீகரமாக இல்லை?

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 98 ரன்கள் எடுத்தார். அக்தர் பந்தில் சிக்ஸ் அடித்தது, வாசிம் அக்ரம் பந்தை எதிர்கொண்ட விதம் சிறப்பானது. அப்போது நீங்கள் இளம் வீரராக கிரிக்கெட்டில் நுழைந்தீர்கள், இல்லையா?

பின்னர் 2009-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்த போட்டியில் கடைசியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த நேரத்தில் நீங்கள் இந்திய அணியில் நுழைந்தீர்கள். நீங்கள் ஒரு திறமையான புதிய வீரர். நீங்கள் எங்கள் ஹீரோ உடன் ஆடை அறையில் சில விஷயம் பகிர்ந்து கொண்டு இருப்பீர்கள்.

உலகக்கோப்பை வெற்றியை சச்சினை தூக்கி கொண்டாடிய கோலி.
உலகக்கோப்பை வெற்றியை சச்சினை தூக்கி கொண்டாடிய கோலி.

இந்த ஒரு கணம் எங்கள் மனதில் பொறிக்கப்பட்டுள்ளது, உங்கள் தோள்களில் எங்கள் ஹீரோவை சுமந்து சென்றது.

டெண்டுல்கரின் சுமையைப் பற்றி பேசினோம், அப்போது நிம்மதியாக இருந்தோம். ஏனெனில் டெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டு சென்ற பிறகு, இந்திய அணியை முன்னோக்கி எடுத்தவர் நீங்கள்தான்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2012-ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில், டெண்டுல்கரின் இறுதி ஒருநாள் போட்டிக்கு நாம் செல்லலாம். இந்திய அணி 0/1 என்ற நிலையில் லிட்டில் மாஸ்டருடன் சேர்ந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தீர்கள். எதிர்பாராமல் டெண்டுல்கர் 52 ரன்களில் வெளியேறினார். ஆனால் நீங்கள் இறுதி வரை நீடித்தது 183 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தீர்கள்.

2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 52 பந்துகளில் 100 ரன்கள் நீங்கள் அடித்தபோது, அடுத்த டெண்டுல்கர் என்று உங்களை பற்றி மக்கள் பேச ஆரம்பித்தார்கள். முதலில் நான் அதை ஒரு ஜோக் என நினைத்தேன். சச்சின் அளவிற்கு யாரால் நெருங்கி வர முடியும்? அவரது 49 சதங்கள், 18,000 பிளஸ் ரன்கள் நெருங்கி வர முடியுமா?

ஆனால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் வளர்ச்சியடைத்து வந்தீர்கள். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் நீங்கள். 2014-ஆம் ஆண்டு 4 சதங்கள், 1054 ரன்கள் எடுத்திருந்தீர்கள்.

அந்த ஆண்டில் கங்குலி அடித்த சதத்தை கடந்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வந்தீர்கள். டெண்டுல்கரின் ஒருநாள் போட்டி சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்ற ஆபத்தில் நான் பயந்தேன்.

2017-ஆம் ஆண்டு 6 சதங்கள், 1460 ரன்கள் நீங்கள் எடுத்தீர்கள். நான் நினைத்தேன் "கோலியால் சற்றே சவாலாக இருந்தது டெண்டுல்கரின் சாதனைகள்.

2018-ஆம் ஆண்டில் நீங்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வேகமாக 10,000 ரன்கள் எடுத்த டெண்டுல்கரின் சாதனை முறியடித்தீர்கள். 39 சதங்கள் அடித்த நீங்கள் இன்னும் 10 சதங்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் டெண்டுல்கரின் 49 சதங்கள் அடித்த சாதனை முறியடிக்கப்படுவீர்கள் என்று நான் இப்போது பயப்படுகிறேன்.

சச்சினின் அற்ப்புதமான ஆட்டம் கோலியின் ஆட்டம் போல உள்ளதா? மீண்டும் பதில் சொல்கிறேன்: இல்லை.

நான் வருந்துகிறேன் விராத், நான் உங்கள் ஆட்டத்தை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் மீண்டும் சொல்கிறேன் இது உங்கள் சொந்த தவறு இல்லை.

தங்கள் உண்மையுள்ள,

ஒரு தீவிர சச்சின் ரசிகர்

எழுத்து - சாய் சித்தார்த்

மொழிபெயர்ப்பு - சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links

Edited by Fambeat Tamil