ஆஸஷ் 2019: மூன்றாவது போட்டியில் ஸ்டிவன் ஸ்மித் இல்லாத குறையை போக்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா?

Australia opener David Warner at Lord's
Australia opener David Warner at Lord's

2019 ஆஸஷ் தொடரில் ஹேட்டிங்லேவில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டிவன் ஸ்மித் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்டிவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து மண்ணில் திகழ்கிறார். எட்ஜ்பாஷ்டனில் நடந்த முதல் போட்டியில் ‌முதல் இன்னிங்ஸில் 144 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களும் விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று 1-0 என முன்னிலை வகிக்கச்செய்தார். இதைத்தொடர்ந்து லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 92 ரன்களை குவித்தார்.

ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்டிவன் ஸ்மித் காயமடைந்ததால் போட்டி டிரா ஆனது. இருப்பினும் இத்தொடரில் ஆஸ்திரேலியாவே முன்னிலை வகிக்கிறது.

லீட்ஸில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் பங்கேற்க மாட்டார். இதனால் இங்கிலாந்து அணி மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது. இந்த நட்சத்திர பேட்ஸ்மேன் இல்லாநிலையை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை வீழ்த்த கண்டிப்பாக திட்டமிடும்.

Steven Smith
Steven Smith

ஸ்டிவன் ஸ்மித் இல்லா நிலையை போக்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தங்களை நிரூபிக்கும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி "ஆஸ்திரேலியா ஒருவரையே நம்பி இல்லை! என உலகிற்கு உணர்த்துவார்களா? அத்தகைய பொறுப்பேற்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களைப் பற்றிய ஒரு பார்வை!

டேவிட் வார்னர்

டேவிட் வார்னரும், ஸ்டிவன் ஸ்மித்தைப் போலவே 12 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். இவர்கள் கடந்த வருடம் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் துணைக்கேப்டனான டேவிட் வார்னர், ஒரு வருடத்திற்கு பின்னர் ஸ்டிவன் ஸ்மித்தைப் போல சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. உலகின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த டேவிட் வார்னரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் இழந்த ஆட்டத்திறனை ஆட்டத்திறனை மீட்டெடுக்க இயலவில்லை.

32 வயதான டேவிட் வார்னரின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 46.9 ஆகும். ஆனால் இந்த ஆஸஷ் தொடரில் இவர் விளையாடிய 4 இன்னிங்ஸிலும் இரு இலக்க ரன்களை கூட எடுக்க மிகவும் தடுமாறுகிறார்.

இவ்வருட ஆஸஷ் தொடரில் டேவிட் வார்னர் விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் அவர் குவித்த ரன்கள் முறையே 2, 8, 3 மற்றும் 5 ஆகும். இவரை மூன்று முறை ஸ்டுவர்ட் பிராட்-ல் வீழ்த்தப்பட்டுள்ளார். கடைசியாக லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஜோஃப்ரா ஆர்ச்சரால் வீழ்த்தப்பட்டுள்ளார்.

நம்பர் 4 பேட்ஸ்மேன் ஸ்டிவன் ஸ்மித் 3வது டெஸ்டில் விளையாடத காரணத்தால் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மிகவும் பொறுப்புடன் விளையாடியாக வேண்டும்.

கேமரூன் பென்க்கிராஃப்ட்

Cameron bencroft
Cameron bencroft

தொடக்க ஆட்டக்காரர்களின் சிறு பங்களிப்பு கூட இல்லாமல் ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங்கால் மட்டுமே அந்நிய மண்ணில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் முன்னணியாக விளங்குகிறது.

டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரராக ஒற்றை இலக்கங்களில் வெளியேறுகிறார். வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித்தைப் போல தடைலிருந்து மீண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள கேமரூன் பென்க்கிராஃப்ட், வார்னரை விட சற்று சிறப்பான தொடக்கத்தை அளிக்கிறார்.

வார்னர் விழும்போது பென்கிராஃப்ட் சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் இவர் விளையாடியுள்ள இரு போட்டியிலுமே ஒரு பெரிய இன்னிங்ஸை வெளிபடுத்த தவறுகிறார்.

26 வயதான கேமரூன் பென்கிராஃப்ட் தனது சக ஆஸ்திரேலிய வீரர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடிக்கொண்டிருந்த போது, இவர் உள்ளூர் தொடரில் டர்ஹாம் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இந்த பேட்டிங்கை டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

எட்ஜ்பாஷ்டனில் நடந்த போட்டியில் 7 மற்றும் 8 ரன்களையும், லார்ட்ஸ் டெஸ்டில் 13 மற்றும் 16 ரன்களையும் அடித்துள்ளார். இதனை பார்க்கும் போது தனது பேட்டிங்கை முன்னேற்ற பென்கிராஃப்ட் முயற்சிக்கிறார் எனத் தெரிகிறது.

டிம் பெய்ன்

Paine
Paine

டிம் பெய்ன் ஒரு கேப்டனாக பொறுப்பேற்று விளையாட வேண்டும். ஆனால் அவரது கேப்டன்ஷீப் முன்னாள் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் போன்று இல்லை என புகார்கள் எழுந்துள்ளன.

தற்போது ஸ்மித் 3வது போட்டியில் விளையாடத காரணத்தால் ஒரு கேப்டனாக சிறந்த ஆட்டத்தை டிம் பெய்ன் வெளிபடுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் வலுவான அடித்தளத்தை அமைத்து போட்டியை எடுத்துச் செல்லுதல் அவசியம்.

ஸ்டிவன் ஸ்மித் சதத்தின் மேல் சதம் குவித்து வருகிறார். ஆனால் டிம் பெய்ன் தான் விளையாடிய நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து 66 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

லார்டஸ் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டனின் பொறுப்பான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டபோது ஒற்றை இலக்க ரன்னில், ஜோ டென்லியால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார்.

கடைநிலையில் வலிமையான பேட்டிங்கை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளிக்க கண்டிப்பாக டிம் பெய்ன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

மார்னஸ் லபுஷெனே

லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டிவன் ஸ்மித்திற்கு நேரடி மாற்று வீரராக களம் கண்ட மார்னஸ் லபுஷெனே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 100 பந்துகளில் 59 ரன்களை குவித்தார்.

கண்டிப்பாக லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பை தக்கவைக்க சிறந்த ஆட்டத்தை இவர் வெளிபடுத்த முயற்சி செய்வார். ஆஸ்திரேலிய அணியில் புதிதாக யாரும் சேர்க்கப்படாத வகையில் சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்டு உள்ளது.

உஷ்மான் கவாஜாவின் பேட்டிங் சராசரி 41.4 ஆகும். ஆஸஷ் டெஸ்ட் தொடரில் இவர் அடித்த ரன் முறையே 13, 40, 36 மற்றும் 2. டிராவிஸ் ஹேட்-டின் சராசரி 49.9 ஆகும். இவரது பேட்டிங் சற்று சிறப்பாக ஆஸஷ் டெஸ்டில் இருந்துள்ளது‌‌. இவர் அடித்த ரன்கள் முறையே 35, 51, 7 மற்றும் 42 ஆகும். இருவருமே பேட்டிங்கை சற்று மேம்படுத்த வேண்டும்.

மேதீவ் வேட்-டின் பேட்டிங் ஒரே சீராக இருப்பதில்லை. இவரது ஆஸஷ் ரன் குவிப்பு முறையே 1, 101, 6 மற்றும் 1 ஆகும்‌. இவரது ஆட்டம் சீராக இல்லாத காரணத்தால் எந்நேரத்திலும் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

ஸ்மித் இல்லாத நிலையில் அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல் அவசியம். ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருக்கும் போது மிகவும் கடினம்.

Edited by Fambeat Tamil