உலக கோப்பையில் ஆஸ்திரேலியா எப்போதுமே ராஜா தான்: ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லாங்கர்
ஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலருக்கு பிடித்த அணிகளாக இருக்கலாம். ஆனால் ஆஸிதிரேலியா தான் என்றும் கிரிக்கெட் உலகில் நெ.1 அணி என்கிறார் ஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

தடுமாற்றமான 12 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பைக்கு அசுர பலத்துடன் திரும்புகிறது. இந்த காலத்தில் எங்களின் போட்டியாளர்கள் சிலர் எங்களை விழ்த்தியுள்ளனர், இருந்தாலும் எங்கள் அணி உலக கோப்பைக்கு முழுமையான தங்கமாக திரும்பியுள்ளனர்.

2015 உலகக் கோப்பையை வென்ற அணியின் ஆறு வீரர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருடன் இணைந்து உலகக் கோப்பையில் பங்கேற்க எட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலக கோப்பை சாம்பியன் அணியின் ஏழாவது வீரராக, வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசுல்வுட் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அவர் தற்போது இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடி வருகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக விலகும் பட்சத்தில் இவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இது தற்போதைய அணியே மாறுதல்களுக்குட்பட்டது என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹொன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்க்கு கடும் சவாலாக, 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இந்திய அணி தனது சூப்பர் ஸ்டார் ஜோடி எம்.எஸ். டோனி மற்றும் விராத் கோலி ஆகியோர் மூலம் உலகக் கோப்பை தொடரில் வெல்ல கடும் நெருக்கடி தருவார்கள்.

1987 முதல் எட்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது எனவே இந்த ஆண்டும் வெல்வோம் என நம்புவதாக முன்னாள் தொடக்க வீரரும் ஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் கூறுகிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகமான அடித்தளம் (கிராஸ் ரூட்) இருக்க வேண்டும் அது ஆஸ்திரேலிய அணியை போல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் உள்ளது எனவே அவர்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரைப் பற்றிப் பேசுவது மிகவும் நல்லது, இருவரும் 12 மாத இடைவெளிக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ளனர். அவர்களின் அனுபவம் முழுமையான தங்கம் போன்றது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை உலகக் கோப்பை, ஆஷஸ் மற்றும் பெரிய போட்டிகளில் வெல்ல பல நேரங்களில் இளம் வீரர்களின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது, இந்த உலக கோப்பை தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல் படுவார்கள் என நம்புகிறேன்.

2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி
2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி

உலக கோப்பை தொடர்களில் நாங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்திருக்கிறோம், அது பெருமையாக இருந்தாலும், அந்த பொறுப்புடன் இந்த தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க பாடுபடுவோம் என்கிறார்.

நாங்கள் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவதற்காக வலை பயிற்சியில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம், இந்த தொடரில் ஸ்பின்னர்களின் பங்கு பெரிதாக இருக்க வாய்புள்ளது என லாங்கர் கூறினார். ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி ஜூன் 1 ஆம் தேதி பிரிஸ்டலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்குகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil