தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு

Hardik Pandiya
Hardik Pandiya

தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. இந்திய தேர்வுக்குழு கமிட்டி இன்று மும்பையில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான டி20 அணியை தேர்வு செய்ய கூடியது. பெரும்பாலும் மேற்கிந்தியத் தீவுகளை வைட் வாஷ் செய்த அதே டி20 அணி களம் காணும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது உடற்தகுதியை மீண்டும் மெருகேற்றி அணிக்கு திரும்பியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்ற அனைவரும் மேற்கிந்தியத் டி20 தொடரில் இடம்பெற்ற வீரர்கள் தான்.

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தோனி எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு இராணுவ பயிற்சிக்கு சென்று விட்டார். இதனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் களம் காண்பார் என எதிர்பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார். ரிஷப் பண்ட் ஏற்கனவே டெஸ்ட் போட்டியின் வழக்கமான விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். தோனி குறிப்பிட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக இருந்து வந்தார்.

ரிஷப் பண்ட் ஆரம்ப உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. ஷீகார் தவானிற்கு ஏற்பட்ட கட்டை விரல் முறிவினால் மாற்று வீரராக களம் கண்டார் ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோரும் இல்லை. எனவே இந்திய அணி எதிர்வரும் 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஒரு புதிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த திட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் சகால் இல்லை.

மேலும் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பூமாராவும் தென்னாப்பிரிக்கத் டி20 தொடரில் இடம்பெறவில்லை. வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஓடிஐ/டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெற்றிருந்தார். மீண்டும் தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் பூம்ரா அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரின் தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த டி20 அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 15, 18 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷீங்டன் சுந்தர், தீபக் சகார், கலீல் அகமது, ராகுல் சகார், நவ்தீப் சைனி.

Quick Links

Edited by Fambeat Tamil