2018-ஆம் ஆண்டிற்கான 11 பேர் கொண்ட சிறந்த ஒருநாள் அணி

England v India - 1st ODI: Royal London One-Day Series
England v India - 1st ODI: Royal London One-Day Series

#5 ரோஸ் டெய்லர்:

Ross Taylor
Ross Taylor

டெய்லர் நியூசிலாந்து அணியை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மென். இந்தாண்டு குறைவான போட்டிகளே விளையாடியுள்ளார் எனினும் சீராகவும் அணிக்கு தேவைப்படும் பொழுது சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில், 10 போட்டிகளில் பங்கேற்ற இவர் 639 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 91.28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 88.87 ஆகும். இந்த ஆண்டில் 4 அரைசதங்கள் அடித்துள்ள, இவர் 2 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 181* ஆகும்.

#6 ஜோஸ் பட்லர்:

Jos Butler
Jos Butler

ஜோஸ் பட்லர் இந்த அணியின் ஃபினிஷராகவும் விக்கெட்கீப்பராகவும் செயல்படுவார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடிய தன்மை பெற்ற இவர் எந்த ஒரு அணிக்கும் ரன் சேர்க்கலாம். விக்கெட் கீப்பராகவும் செயல்படும் இவர் எந்தவித போட்டியுமின்றி தேர்வாகிறார்.

இந்த ஆண்டில், 23 போட்டிகளில் பங்கேற்ற இவர் 671 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 51.62 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 113.54 ஆகும். இந்த ஆண்டில் 4 அரைசதங்கள் அடித்துள்ள இவர் 2 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 110* ஆகும். விக்கெட் கீப்பராக 26 கேட்ச்களையும் 9 ஸ்டும்பிட்களையும் கொண்டுள்ளார்.

#7 ஷாகிப் அல் ஹஸன்:

Shakib Al-Hasan
Shakib Al-Hasan

அணியின் ஒரே ஆல்ரவுண்டராக தேர்வாகிறார் ஷாகிப். உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டியி்ன் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இவர் இந்தாண்டில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக மற்ற ஆல்ரவுண்டர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்த ஆண்டில், 15 போட்டிகளில் பங்கேற்ற இவர் 497 ரன்களை சேர்த்துள்ளார். பேட்டிங் சராசரி 38.23 ஆகும். 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவரின் பவுலிங் சராசரி 26.81 ஆகும். எகானமி 4.48. வங்கதேசம் அணியை சேர்ந்த இவர் பவுலிங்கில் 10 ஓவர் மற்றும் 7-வது பேட்ஸ்மேனாக களம் காண்பதால் அணியின் முக்கிய வீரராக செயல்படுவார்.

Edited by Fambeat Tamil