Create
Notifications
Favorites Edit
Advertisement

ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்!!

  • இதிலும் இந்திய பவுலர்கள் தான் முன்னிலை!!
Rajkumar
SENIOR ANALYST
முதல் 5 /முதல் 10
Modified 20 Dec 2019, 21:32 IST

ஐபிஎல் என்னும் பிரபலமான தொடர் வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும். இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு குறை இருக்காது. 20 ஓவர் போட்டி என்பதால் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடுவர்.

Lasith Malinga And Bumra
Lasith Malinga And Bumra

எனவே போட்டியின் கடைசி பந்து வரை, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தனது தாய் நாட்டிற்காக விளையாடும் பல இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரின் மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால், பார்மில் இல்லாத பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி, அதன் மூலம் தனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சிறப்பாக விளையாடும் வெளிநாட்டு வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் போட்டியிட்டு எடுத்து கொள்வர். இவ்வாறு ஐபிஎல் தொடர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

#1) பிரவீன் குமார்

Praveen Kumar
Praveen Kumar

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார். இவர் ஐபிஎல் தொடரின் சிறந்த டெத் பவுலர்களின் பட்டியலில் இருந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வருடமும், பஞ்சாப் அணிக்காக மூன்று வருடமும், பெங்களூர் அணிக்காக 2 வருடமும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் விளையாடிய அனைத்து அணிகளிலுமே, சிறந்த டெத் பவுலராக விளங்கியவர். துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்தவர். 20 ஓவர் என்றாலே அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்களின் மத்தியில், ஒரு ஓவரை மெய்டன் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த சாதனையை இவர் 14 முறை செய்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களையும் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2) இர்பான் பதான்

Irfan Pathan
Irfan Pathan

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 வருடமும், டெல்லி அணிக்காக 3 வருடமும் சன்ரைசர்ஸ் அணிக்காக தலா ஒரு வருடமும் விளையாடி இருக்கிறார். இவரும் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர் தான். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மதிப்பு அதிகம். இதன் காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்கள் வலதுகை பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள்.

1 / 2 NEXT
Published 13 Feb 2019, 18:35 IST
Advertisement
Fetching more content...