CEAT சர்வதேச கிரிக்கெட் விருதுகள்: வழங்கப்பட்ட 11 விருதுகளில் 9 விருதுகளை தட்டிச் சென்ற இந்திய வீரர்கள்

Courtesy: CEAT/Twitter
Courtesy: CEAT/Twitter

CEAT சர்வதேச கிரிக்கெட் விருதுகளில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இவ்வருடம் இருந்தது. உலகின் சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் மற்றும் பேட்ஸ்மேன் விருதினை இந்திய கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றார். இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் புஜாரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவருக்கு உலகின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

2019 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார். இந்திய தொடக்க ஆட்டக்காரரான இவர் கடந்த வருடத்தில் 1030 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். 2019 இந்திய உலகக் கோப்பை அணியில் ரோகித் சர்மா ஒரு முன்னணி வீரராக திகழ்கிறார்.

இந்திய அணியில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் ஜாஸ்பிரிட் பூம்ரா இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளருக்கான விருதினை தட்டிச் சென்றார். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டிகளில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் தற்போது உலகின் தலைசிறந்த பௌலராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

ஆரோன் ஃபின்ச் இவ்வருடத்தின் சிறந்த டி20 வீரருக்கான விருதினை வென்றார். குல்தீப் யாதவ் இவ்வருடத்தின் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியதற்கான விருதினை தட்டிச் சென்றார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கானிற்கு இவ்வருடத்தின் சிறந்த டி20 பௌலருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஸ்மீரத்தி மந்தனா இவ்வருடத்தின் சிறந்த பெண் கிரிக்கெட்டர் என்ற விருதினைப் பெற்றார்.

1983ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மோஹீந்தர் அமர்நாத்-ற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கு விழாவில் பேசிய இவர் பரிசுத் தொகையில் பாதி இராணுவ நல தொகைக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிரிக்கெட் விருது வழங்கு விழாவில் முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

விருதுகளை வென்றவர்களின் பட்டியல்

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் & பேட்ஸ்மேன் - விராட் கோலி

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச பௌலர் - ஜாஸ்பிரிட் பூம்ரா

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டர் - புஜாரா

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச ஓடிஐ கிரிக்கெட்டர் - ரோகித் சர்மா

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட்டர் - ஆரோன் ஃபின்ச்

இவ்வருடத்தின் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியவர் - குல்தீப் யாதவ்

இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச டி20 பௌலர் - ரஷீத் கான்

வாழ்நாள் சாதனையாளர் விருது - மோஹீந்தர் அமர்நாத்

இவ்வருடத்தின் சிறந்த உள்ளூர் கிரிக்கெட்டர் - ஆஸ்டோஸ் அமன்

இவ்வருடத்தின் சிறந்த பெண் கிரிக்கெட்டர் - ஸ்மீர்த்தி மந்தனா

இவ்வருடத்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் - யாஸாஸ்வி ஜெய்ஸ்வால்

Quick Links

Edited by Fambeat Tamil