அதிக முறை உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்கள் 

Sachin Tendulkar and Javed Miandad top this list
Sachin Tendulkar and Javed Miandad top this list

விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றின் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்டு மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்படும் தொடர்களில் ஒன்று, கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர். இந்தப் பெருமை வாய்ந்த தொடரில் தனது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இடம்பெறுவது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவாகும். இதற்காக பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி தமது திறமையை வளர்த்துக் கொண்ட வீரர்கள் ஏராளம். தொடர்ந்து பல ஆண்டு காலமாக விளையாடிய வீரர்கள் கூட கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களை தவறவிட்டுள்ளனர். இதற்கு எதிர்மாறாக, சில வீரர்கள் 5க்கும் மேற்பட்ட தொடர்களில் கூட விளையாடி சாதனை படைத்துள்ளனர். தற்போது கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 12வது சீசன் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி பலமாக இருந்தாலும் அதற்கு சவால் அளிக்கும் வகையில், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#4.ரிக்கி பாண்டிங் - ஐந்து தொடர்கள்:

Ricky Pointing has been one of the most successful captains in World Cup history
Ricky Pointing has been one of the most successful captains in World Cup history

உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்திய அணிகளில் ஒன்று, ஆஸ்திரேலியா. இந்த அணி மட்டுமே 5 முறை உலக கோப்பை தொடரை வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 5 முறை உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை விளையாடி உள்ளார். தான் அறிமுகம் கண்ட 1996ஆம் ஆண்டிலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார், ரிக்கி பாண்டிங். இவரது திறமைக்கு அப்பாற்பட்டு, தனது அபார தலைமையின் கீழ் இரு முறை ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை தொடர்ந்துள்ளார். ஒரு வீரராக மூன்று முறை உலக கோப்பை தொடரை வென்ற அணியில் இடம்பெற்று உள்ளார். இறுதியாக, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிப் போட்டிக்கு வரை ஆஸ்திரேலியாவை அழைத்துச் சென்றார். இந்தியாவிடம் தோற்ற தொடரில் இருந்து வெளியேறியது, ஆஸ்திரேலிய அணி.

#3.கிறிஸ் கெய்ல் - ஐந்து தொடர்கள்:

Chris Gayle has been one of the star players for West Indies
Chris Gayle has been one of the star players for West Indies

கிரிக்கெட் உலகின் பொழுதுபோக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்று, வெஸ்ட் இண்டீஸ். 1970, 80-களில் உலகின் தலை சிறந்த அணியாக வெஸ்ட்இண்டீஸ் திகழ்ந்தது. முதல் இரு உலக கோப்பை தொடர்களை இந்த அணியே வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து நீண்ட ஆண்டுகாலமாக, இத்தகைய அணிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பங்காற்றி வருகிறார், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். இந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான பிரையன் லாரா மற்றும் சந்திரபால் ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர், அணியின் நட்சத்திர தொடக்ககாரராக தனது பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறார், கெய்ல். இவர் இதுவரை நான்கு முறையும் தற்போது நடந்து வரும் 2019 உலகக்கோப்பை தொடர் உட்பட ஐந்து தொடர்களில் விளையாடி உள்ளார். 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகம் கண்ட இவர், கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து உலக கோப்பை தொடரில் இரட்டை சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உலகக் கோப்பை கிரிக்கெட் வாழ்வில் பங்கேற்ற ஐந்து வெவ்வேறு தொடர்களும் ஐந்து வெவ்வேறு கண்டங்களில் நடைபெற்றுள்ளது என்பது மற்றுமொரு சிறப்பாகும்.

#2.ஜாவித் மியான்தத் - 6 தொடர்கள்:

Javed Miandad was the part of the Pakistani team which won the 1992 World Cup.
Javed Miandad was the part of the Pakistani team which won the 1992 World Cup.

1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வென்று இரண்டாவது ஆசிய அணி என்ற பெருமையை படைத்தது, பாகிஸ்தான். தனது முதலாவது சாம்பியன் பட்டத்தை தற்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் தலைமையில் வென்று இருந்தது, அந்த அணி. 1975ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாவது உலக கோப்பை தொடரின் முதல் பங்கேற்று வந்த ஜாவித் மியான்தத் 1992ஆம் ஆண்டில் ஷார்ஜாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர் அடித்து அதிக பேசும் பொருளானார். 1975 ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஆறு வெவ்வேறு தொடர்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மேலும், இத்தகைய சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார், ஜாவித் மியான்தத்.

#1.சச்சின் டெண்டுல்கர் - 6 தொடர்கள்:

Sachin Tendulkar thanking the fans after winning the 2011 ICC World Cup
Sachin Tendulkar thanking the fans after winning the 2011 ICC World Cup

"கிரிக்கெட் கடவுள்" என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர்1989ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2003-ம் ஆண்டு வரை என 24 ஆண்டுகள் , இந்திய அணிக்கு பங்களித்துள்ளார். இவரது கடைசி உலகக் கோப்பை தொடரான 2011ம் ஆண்டில் தனது வாழ்வின் முதலாவது சாம்பியன் பட்டத்தினை வென்றிருந்தார், சச்சின் டெண்டுல்கர். இதற்கு முன்னால், இவரது கிரிக்கெட் காலத்தில் எந்த ஒரு தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றதில்லை. பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத் உடன் இணைந்து உலக கோப்பை தொடர்களில் அதிக முறை பங்கேற்ற வீரர் என்ற சாதனையையும் பகிர்ந்துள்ளார், சச்சின் டெண்டுல்கர். 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2011-ம் ஆண்டு வரை என 6 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று உள்ளார், சச்சின். ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து சாதித்திருக்கும் சச்சின், உலக கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். எனவே, இவருக்கு சிறந்த ஒரு தொடரை அளிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்று சில மறக்க முடியாத தருணங்களை அளித்திருந்தது.

Quick Links