இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றி அடைந்த வீரர்களில் ஒரு மகேந்திர சிங் தோனி. இந்தியாவின் அனைத்து கால சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்குகிறார். கிரிக்கெட் உலகில் பல்வேறு வித சாதனைகளைக் கண்டுள்ளார் இந்த பெரும் வீரர். பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய அணியைத் தமது தலைமையின் கீழ் திறம்பட வழிநடத்தியும் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி கிரிக்கெட் உலகின் உச்சத்தை அடைந்தது.
இவரது தலைமையில் தான் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளான 50 ஓவர், 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று தந்துள்ளார். இத்தகைய மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சாரும். மேலும், இவர் ஆசிய கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அல்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் தன் கேப்டன் தந்திரத்தை நிரூபித்தார். இதனால், இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.
இந்த கேப்டன் தன் அணி பல சாதனைகள் புரிய வழிநடத்தினார், அதுவும் குறுகிய கால கிரிக்கெட் உலகில். கிரிக்கெட் உலகில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார், விக்கெட் கீப்பராக அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என இவரது சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே. ஒரு உண்மையான தோனி ரசிகன் அவரின் சில சாதனைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதோ அவ்வாறான தோனியின் தனிப்பட்ட சில சாதனைகளை நான் இங்கே பட்டியலிட்டு உள்ளன்.
5.அதிகமுறை ஒருநாள் போட்டிகளில் நாட்-அவுட் பேட்ஸ்மேன்:
அனைவரும் இவரைப் பார்த்து விரும்பவும் திகைக்கவும் செய்யக் காரணம் இவர் அணியை ஆட்டத்தின் இறுதி வரை வழிநடத்தி செல்லும் திறனே. சில நேரங்களில் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்களை இழந்து அணி ஊசலாடும்போது தனி ஆளாய் களத்தில் நின்று வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துள்ளார். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றை விவரிக்க அவசியம் இல்லை. மேலும் தனது மின்னல் வேக ஸ்டம்பிங்குகள் மூலம் தனது முந்தைய சாதனையான 0.09 நொடிகள் என்னும் ஸ்டம்பிங் வேகத்தை 0.08 நொடிகளாகத் தானே முறியடித்து உள்ளார்.
கேப்டன் பணியைத் துறந்தபோதிலும் அவ்வப்போது களத்தில் கோலிக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அதில் வெற்றியும் காண்கிறார் என்பதை நாம் கண் முன்னால் பார்க்கிறோம். அவ்வப்போது கேதர் ஜாதவை அழைத்துப் பந்து வீசவும் செய்து, விக்கெட் விழவும் செய்கிறார். தோனி சில போட்டிகளில் இன்னிங்சின் இறுதிவரை அழைத்துச் சென்று ரன்களை குவித்து வெற்றிக்கண்டுள்ளார். இதுவே இவருக்கு ஒரு தனி சாதனையைத் தந்துள்ளது. 78 முறை நாட்அவுட் அடிப்படையில் தனிப்பெரும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். பின் வரிசை பேட்ஸ்மேன்களில் தனக்கு நிகர் எவரும் உலகில் இல்லையெனப் பல முறை நிரூபித்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இத்தகைய சாதனையை ஒருபோதும் செய்தது இல்லை.