விராட் கோலிக்கு மிக முக்கியமானவர் தோனி; ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையின் தொடர் ஆட்டநாயகன் - சுரேஷ் ரெய்னா

Dhoni & Suresh Raina
Dhoni & Suresh Raina

நடந்தது என்ன?

சுரேஷ் ரெய்னா 10 வருடங்களுக்கு மேலாக மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடி உள்ளார். 37 வயதான மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷீப் தற்போது உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவை எனவும், மற்றும் ஹர்திக் பாண்டியா 2019 உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வெல்வது சந்தேகமில்லா உண்மையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனுபவ ஆல்-ரவுண்டர் சுரேஷ் ரெய்னா தற்போது நெதர்லாந்தில் தனது விடுமுறை நாட்களை கழிக்க சென்றுள்ளார். அப்போது "பிடிஐ" பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் உலகக் கோப்பையில் தோனியின் கேப்டன்ஷீப் அனுபவம் விராட் கோலிக்கு மிகவும் அவசியாமான ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். இவரது அனுபவம் மூலம் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளார்.

உங்களுக்கு தெரியுமா...

இந்திய அணி நிர்வாகம் மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பை தொடரில் தோனியின் முக்கியத்துவம் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

தோனியின் அனுபவம் விராட் கோலிக்கு உலகக் கோப்பை தொடரில் கிடைத்த ஒரு அதிர்ஷ்ட கல் போல சிறப்பானதாக இருக்கும். இதன்மூலம் இந்திய அணி உலகக் கோப்பையில் எவ்வித இடற்பாடும் இன்றி நிம்மதியாக கோப்பையை வென்று சாதிக்கும்.

கதைக்கரு

மகேந்திர சிங் தோனியின் சக வீரர் சுரேஷ் ரெய்னா கூறியதாவது,

"பேப்பரில் தோனி கேப்டன் இல்லை, ஆனால் களத்தில் விராட் கோலியின் கேப்டனாக தோனி உள்ளார்"

மேலும் தோனி குறித்து ரெய்னா தெரிவித்துள்ளதாவது,

"தோனியின் பங்களிப்பு தற்போது வரை இந்திய அணிக்கு உதவி வருகிறது. விக்கெட் கீப்பராக ஸ்டம்பிற்கு பின்னால் நின்று பௌலர்களை வழிநடத்துவார், அதே சமயத்தில் ஃபீல்டர்களையும் தக்க இடத்தில் நிற்க வைப்பார். இவர் கேப்டன்களுக்கெல்லாம் கேப்டனாக உள்ளார். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் தோனியைக் கண்டு விராட் கோலி அதிக நம்பிக்கை பெறுவார். இவர் இந்திய அணியில் இருப்பது விராட் கோலிக்கு மிகுந்த சாதகம்".

இவ்வருட உலகக்கோப்பை தொடர் இந்திய கேப்டனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா விருப்புகிறார்.

தோனி ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அதிக தன்னம்பிக்கை கொண்டவர். இந்த உலக கோப்பை இவருக்கு மிகப்பெரிய தொடராகும். இவர் உலகக் கோப்பையில் என்ன செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்தவர். தனது சக வீரர்களுக்கும் தோனி நம்பிக்கையை அளிக்க வேண்டும். அனைத்தும் இந்திய அணிக்கே சாதகமாக உள்ளது. அனைத்தும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். இதுவே உலகக் கோப்பை வெல்ல சிறந்த அணி.

அத்துடன் ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் குறித்தும் "2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா" தெரிவித்திருந்தார்.

" இவரது ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. அத்துடன் பௌலிங்கில் 6-7 ஓவர்களை சிறப்பான முறையில் வீசும் திறன் படைத்துள்ளார். எந்த பேட்டிங் வரிசையிலும் களமிறங்கி அசத்தும் திறமை உடையவர். இவர் அணி நிர்வாகத்திடமிருந்து அதிக நம்பிக்கை திறனை பெற்று அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். ஐபிஎல் தொடரில் வைத்திருந்த நம்பிக்கையை தொடர்ந்தால் கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் ஆட்டத்தை மாற்றக்கூடியவர். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். ஹார்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.

2019 உலகக் கோப்பை இந்திய அணிக்கு சாதகமாகவே அமையும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரெய்னா கூறுகையில்,

" இந்திய அணி அரையிறுதிக்கு மிகவும் எளிதாக முன்னேறி விடும். 9 தகுதிச் சுற்று அணிக்கு 9 தகுதிச் சுற்று போட்டிகள் உள்ளன. அணி கட்டமைப்பு இந்திய அணிக்கு தகுந்ததாக அமைந்துள்ளது. சிறப்பான தொடக்கத்தை இந்திய அணி வெளிபடுத்தும். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை யாரலும் தடுக்க இயலாது. உலகக் கோப்பையில் உலகில் உள்ள ஒவ்வொருவரின் விருப்ப அணியாக இந்தியா திகழ்கிறது. எனவே அதற்கேற்றார் போல் இந்திய அணியும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

அடுத்தது என்ன?

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தாலும், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் கே.எல் ராகுல், எம்.எஸ்.தோனி மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் ஜுன் 5 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.

Quick Links