ஒருநாள் போட்டிகளில் ரோஹீத் சர்மாவால் சேஸ் செய்யப்பட்ட 5 சவாலான இலக்குகள்

Rohit Sharma has hit form in the first game of the World Cup
Rohit Sharma has hit form in the first game of the World Cup

ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் போது ரோஹீத் சர்மா பல முறை சதங்களை விளாசியுள்ளார். இந்த சதங்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளன. அதே சமயத்தில் இந்திய அணியின் சேஸிங்கிலும் அதே சம அளவிற்கு சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணி சேஸ் செய்யும் போது மொத்தமாக ரோஹித் சர்மா 4570 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும்.

இவரது சமீபத்திய சிறப்பான இன்னிங்ஸ், 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 122 ரன்களை குவித்துள்ளார். இவரது நிலையான மற்றும் பொறுப்பான ஆட்டத்திற்காக கேப்டன் விராட் கோலியால் ரோஹீத் சர்மா அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளார். இந்த சதத்தின் மூலம் உலகில் சேஸிங்கில் அதிக சதங்களை விளாசிய 4 கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தில்கரத்னே தில்ஷானுடன் பகிர்ந்து கொண்டார். இவருக்கு முன்பாக விராட் கோலி (25 சதங்கள்), சச்சின் டெண்டுல்கர் (17 சதங்கள்), கிறிஸ் கெய்ல் (12 சதங்கள்) ஆகியோர் உள்ளனர்.

இவரது ஸ்பெஷல் பேட்டிங் என்னவென்றால் நெருக்கடியான ஓவர்களில் சமாளித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். விக்கெட்டுகள் மலமலவென சரிந்தும், தேவையான ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே இருந்தபோது ரோகித் சர்மா கணித்து மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரோஹீத் சர்மாவின் அர்பணிப்பினால் இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதே ஆட்டத்திறன் இனிவரும் போட்டிகளிளும் இவர் தொடருவார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நாம் இங்கு ஓடிஐ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவால் சேஸ் செய்யப்பட்ட சிறந்த 5 சவாலான இலக்குகளை பற்றி காண்போம்

#5 141* vs ஆஸ்திரேலியா, ஜெய்ப்பூர், 2013

Rohit Sharma led India to victory
Rohit Sharma led India to victory

2013ல் நடந்த இந்திய-ஆஸ்திரேலிய இருதரப்பு ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ரோஹீத் சர்மா அந்தப்போட்டியில் அதிக நெருக்கடியை சந்திப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய பௌலிங்கை துவம்சம் செய்து 123 பந்துகளில் 141 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த இலக்கை 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 39 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அடைந்தது. இந்த போட்டியில் ரோஹீத் சர்மா 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார்.

இந்த மைதானம் பௌலர்களுக்கு சாதகமானது இல்லை. இருப்பினும் 6 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் இந்த இலக்கு மிகவும் அதிகமானதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஷீகார் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ரோஹீத் சர்மா இரண்டாவதாக சிறந்த இன்னிங்ஸை அளித்து வந்தார். இருப்பினும் ஷீகான் தவான் தனது விக்கெட்டை இழந்த உடனே ரோஹீத் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கினை எட்டினார்.

#4 152* vs மேற்கிந்தியத் தீவுகள், கௌஹாத்தி, 2018

Rohit Sharma pummels the West Indies attack
Rohit Sharma pummels the West Indies attack

2018ல் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஷீம்ரன் ஹட்மைர் 78 பந்துகளில் 106 ரன்களும், கீரன் பௌலின் அரைசதம் ஆகிய டாப் ஆர்டர் பேட்டிங் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்களை குவித்தது.

323 என்ற சற்று அதிக இலக்கினை மேற்கிந்தியத் தீவுகள் குவித்ததாக நினைத்திருந்தது. ஆனால் ரோஹீத் சர்மா அதனை சிதைத்தெறிந்தார். வலதுகை பேட்ஸ்மேன் ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக ஆட்டத்தை கையாண்டார். ஆனால் சற்று செட் ஆகி விட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இருவர்களது பௌலிங்கையும் சிதரவிட்டார்.

ஷீகார் தவான் 2வது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரோஹீத் 246 ரன்களை விராட் கோலியுடன் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினார்.விராட் கோலியும் தனது சிறப்பான ஆட்டத்தினால் 107 பந்துகளில் 140 ரன்களை குவித்தார்.

ரோஹீத் சர்மா 84 பந்துகளில் சதமடித்தார். அடுத்த 32 பந்துகளிலே 150 ரன்களை குவித்தார். சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். 8 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இந்தியா இலக்கை எட்டியது. இறுதியாக ரோஹீத் சர்மா 117 பந்துகளை எதிர்கொண்டு 152 ரன்களை குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

#3 123* vs வங்கதேசம், 2017 சேம்பியன் டிராபி அரையிறுதி

Rohit Sharma played a masterful knock of 123*
Rohit Sharma played a masterful knock of 123*

2017 சேம்பியன் டிராபியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹீத் சர்மா மற்றும் ஷீகார் தவானின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆனால் அரையிறுதியில் வங்கதேச அணி இந்திய அணிக்கு கடும் சவால் ஒன்றை அளித்தது. ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ரத்தான ஆட்டத்தின் மூலம் வங்க தேசம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கதேசத்திற்கு கீழாக புள்ளி பட்டியலில் இருந்தது. இந்திய அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் முதலிடத்தை பிடித்தது.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 265, ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சற்று கடினமாக மைதானத்தில் தமீம் இக்பால் மற்றும் முஷ்டபிசுர் ரஹீம் அரைசதங்களை விளாசினர். இந்த இலக்கை அடைய குறைவான வாய்ப்புகளே இந்தியாவிற்கு இருந்தது. ஏனெனில் அரையிறுதி போட்டி என்பதால் அதிக நெருக்கடியை வங்கதேசம் இந்தியாவிற்கு அளித்தது.

இருப்பினும் ரோஹீத் சர்மா சிறந்த ஆட்டத்திறனுடன் அந்த தொடரில் திகழ்ந்தார். எனவே அரையிறுதியிலும் அதனை தொடர்ந்தார். இவர் களமிறங்கி அனைத்து வங்கதேச பௌலர்களின் பந்துவீச்சையும் தனது அதிரடி பேட்டிங்கால் துவம்சம் செய்தார். இவரது அதிரடி ஷாட்களினாலினால், வங்கதேச பௌலர்களுக்கு ரோஹீத் சர்மாவிற்கு எவ்வாறு பந்துவீசுவது என்றே தெரியவில்லை. ஆனால் வங்கதேசம் ரோஹீத் சர்மாவின் சிறப்பான ஆட்டம் இருக்கும் என கணித்திருக்கும். அந்த தொடரில் தனது முதல் சதத்தினை விளாசினார் ரோஹீத். இவர் இந்த போட்டியில் மொத்தமாக 129 பந்துகளை எதிர்கொண்டு 123 ரன்களை குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிகஸர் அடங்கும். இந்திய அணி 59 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டியது.

#2 99 vs ஆஸ்திரேலியா, சிட்னி, 2016

Rohit in action during his 99-run knock
Rohit in action during his 99-run knock

இந்த போட்டியில்தான் ஜாஸ்பிரிட் பூம்ரா இந்திய அணியில் அறிமுகமானார். இந்தப் போட்டி அனைவருக்கும் நியாபகம் இருந்துருக்கும். ஏனெனில் இப்போட்டியில் தான் மனிஷ் பாண்டே சதம் விளாசி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.

இருப்பினும் இந்த சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர் ரோஹீத் சர்மா. இந்த தொடரில் இந்திய அணி முதல் 4 ஒருநாள் போட்டியிலும் தோல்வியை தழுவியிருந்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வைட்-வாஸ் செய்யும் நோக்கில் 331 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ரோகித் சர்மா அஸ்திரேலியாவின் கனவை கலைத்தார்.

ரோஹித் சர்மா மற்றும் ஷீகார் தவான் இனைந்து 123 ரன்களை பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினர். அதன்பின் தவான் மற்றும் விராட் கோலி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ரோகித் சர்மா ஆட்டத்தின் தன்மையறிந்து மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்து 97 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி ஆட்டத்தின் போக்கை இந்தியா வசம் திருப்பினார்.

ரோகித் 99 ரன்களில் இருந்த போது ஜான் ஹாஸ்டிங்ஸ் வீசிய சற்று அகலமான பந்தை அடிக்க முற்பட்ட போது மேதீவ் வேட்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவரது அடித்தளத்தின் மூலம் இந்தியா எளிதாக அந்தப் போட்டியை வென்றது.

#1 122* vs தென்னாப்பிரிக்கா, 2019 உலகக் கோப்பை

Rohit Sharma showed patience to help India ride over the tide
Rohit Sharma showed patience to help India ride over the tide

இந்திய அணியின் தொடக்க உலகக் கோப்பை போட்டியில் பந்துவீச்சாளர்களின் சிறப்பால் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. யுஜ்வேந்திர சகால் 4 விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தினார். இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய டாப் ஆர்டர் சற்று தடுமாறியது. ரோஹீத் அடித்த பெரும்பாலான பந்து டாப் எட்ஜ் ஆகி மிஸ் ஆகி கொண்டே இருந்தது. இதன்மூலம் இந்த போட்டியில் இவர் ஒரு அதிர்ஷ்ட காரராக திகழ்ந்தார். காகிஸோ ரபாடா அதிக வேகத்தில் பந்தை வீசினார். சில எட்ஜ் பவுண்டரிகளாக மாறியதால் ரோஹீத் சற்று செட் ஆனார்.

எதிர்பாரத விதமாக ஷீகார் தவான், விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய காரணத்தால் ரோஹீத் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சற்று அதிரடியாக வந்த பந்தை பொறுமையாக எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்தப் போட்டி நன்றானதாக அமையவில்லை.

ரோஹீத் சர்மாவின் அனுபவ பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க பௌலர்கள் அவரது விக்கெட்டை வீழத்த தடுமாறினர். ரோஹீத் சர்மா இறுதியாக 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சார்பாக முதல் சதம் விளாசியவர் என்ற பெருமையை பெற்றார் ரோஹீத் சர்மா.

Quick Links

Edited by Fambeat Tamil