2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்

இந்திய அணி
இந்திய அணி

2018 ஆம்ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் 5-1 என்ற கணக்கில் பந்தாடியது இந்திய அணி. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று தொற்ற இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது.

அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தினார். மேலும். விண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

நீண்ட காலமாக சிக்கலாக இருந்துவரும் இந்திய அணியின் நம்பர் 4 பேட்டிங் இடத்தை அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி தன்வசப் படுத்தினார். இந்த ஆண்டு இந்திய அணியில் 4 புதிய வீரர்கள் விளையாடினர். சித்தார்த் கௌல், ரிஷப் பந்த், தீபக் சஹார், கலீல் அஹ்மது ஆகியோர் அந்த நால்வர்.

இந்த ஆண்டு 20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 14 போட்டிகளில் வென்றது. 4 ஆட்டங்களில் தோற்றது. 2 ஆட்டங்கள் டை இல் முடிந்தன.

இந்த தொகுப்பில் 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில் மதிப்புமிக்க 5 வீரர்களை பற்றி காண்போம்

(மேலும் படிக்க : 2018 ஆம் ஆண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் டாப் இன்னிங்ஸ் (பார்மட் வாரியாக))

5) யுஸ்வெந்திர சஹால்

யுஸ்வெந்திர சஹால்
யுஸ்வெந்திர சஹால்

கடந்த இரு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகிறார் சஹால். தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் விக்கெட்கள் சஹால் வீழ்த்துவதில் வல்லவர்.

2018 ஆம் ஆண்டு சஹாலுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது .தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 16 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் நடந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசாத போதிலும் அதை சரி செய்யும் விதமாக ஆசிய கோப்பை போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.

2018 ஆம் ஆண்டு 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

2018 இல் யுஸ்வெந்திர சஹால்

போட்டிகள் - 17, விக்கெட்டுகள் - 29, சராசரி - 26.00, எகானமி - 4.83, சிறந்த பந்துவீச்சு - 5/22, 4- விக்கெட் ஹால் - 2, ஸ்ட்ரைக் ரேட் - 32.31

4) ஜஸ்பிரிட் பும்ரா

ஜஸ்பிரிட் பும்ரா
ஜஸ்பிரிட் பும்ரா

தற்போதுள்ள இந்திய அணியின் சிறந்த வேக பந்துவீச்சாளர் பும்ரா. மலிங்கா போன்று பந்துவீசும் பும்ரா ,யார்க்கர் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வதில் கெட்டிக்காரர் .

தென் ஆப்பிரிக்கா தொடரில் 6 ஆட்டங்களில் வெறும் 8 விக்கெட்டைகளை கைப்பற்றினார். இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக விளையாடாத பும்ரா, ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தார்

இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை கைப்பற்றினார் பும்ரா. தற்பொழுது ஒரு நாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

2018 இல் ஜஸ்பிரிட் பும்ரா

போட்டிகள் - 13, விக்கெட்டுகள் - 22, சராசரி - 16.64, எகானமி - 3.63, சிறந்த பந்துவீச்சு - 4/35, 4- விக்கெட் ஹால் - 1, ஸ்ட்ரைக் ரேட் - 27.50

3) ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளார். இந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 1030 ரன்களை குவித்துள்ளார்

இந்த ஆண்டில் மொத்தம் 5 சதங்களை அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ஒரு ஆட்டத்தில் சதம் அடித்த ரோஹித், பின்னர் நடந்த ஆட்டங்களில் சோபிக்க தவறினார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்தார். பின்னர் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவும் உதவினார்.

விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில ஆட்டமிழக்காமல் 117 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். மேலும் 39 சிக்ஸர்கள் அடித்து இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், உலகின் இரண்டாவது சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா.

2018 இல் ரோஹித் சர்மா

போட்டிகள் - 19, ரன்கள் - 1030, சராசரி - 73.57, ஸ்ட்ரைக் ரேட் - 100, ஐம்பது - 3, நூறு- 5, அதிகபட்ச ஸ்கோர் - 162

2) குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

ஒரு நாள் பந்துவீச்சாளர்கள்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள குல்தீப் யாதவ் இந்த ஆண்டு இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர். 24 வயதான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை கைப்பற்றினார். சஹால் மற்றும் குல்தீப் இணைந்து இந்திய அணிக்கு ஒரு வலுவான ஸ்பின் கூட்டணியை அமைத்தனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்களை வீழ்த்தி அந்த அணியை நிலைகுலைய செய்தார். ஆசிய கோப்பை போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ். 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார் குல்தீப்.

2018 இல் குல்தீப் யாதவ்

போட்டிகள் - 19, விக்கெட்டுகள் - 45, சராசரி - 17.78, எகானமி - 4.64, சிறந்த பந்துவீச்சு - 6/25, 4- விக்கெட் ஹால் - 3, ஸ்ட்ரைக் ரேட் - 22.9

1) விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாதவராக திகழ்கிறார். இந்த ஆண்டு வெறும் 14 போட்டிகளில் ஆடி 1202 ரன்களை குவித்துள்ளார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 133.56.

இந்த ஆண்டு மொத்தம் 6 ஒரு நாள் சதங்கள் அடித்தார் கோலி. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் மூன்று சதம் உள்பட 558 ரன்கள் குவித்தார் கோலி. வேலை பழு காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் கோலி விளையாடவில்லை.

பின்னர் நடந்த விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்தார் கோலி. இதன் மூலம் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் கோலி.

இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கோலி. மேலும் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார் கோலி.

2018 இல் விராட் கோலி

போட்டிகள் - 14, ரன்கள் - 1202, சராசரி - 133.56, ஸ்ட்ரைக் ரேட் - 102.56, ஐம்பது - 3, நூறு- 6, அதிகபட்ச ஸ்கோர் - 160 *

எழுத்து : சிலம்பரசன் கே.வி

மொழியாக்கம் : தினேஷ் சத்தியா

Quick Links

Edited by Fambeat Tamil