இந்திய வீரர்களை பற்றிய ரகசியங்களை உடைத்த முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல்!!!

Gerg Chappell
Gerg Chappell

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சாப்பெல் அந்த அணியின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவராக திகழ்கிறார். 1970 மற்றும் 80களில் கிரிக்கெட் உலகையே கலக்கி வந்த வீரரும் இவரே. இதுவரை இவர் தனது கிரிக்கெட் பயணத்தில் 87 டெஸ்ட் மற்றும், 74 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரில் டெஸ்ட் சராசரி 53.9 ஆகும். 1983 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து இவர் ஓய்வினை அறிவித்தார். அதன் பின்னர் 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராகும் செயல்பட்டு வந்தார். அப்போதைய காலங்களில் விளையாடி வந்த சச்சின் முதல் ஜாகீர் வரை அனைத்து வீரர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார் இவர். இதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.

#1) சவுரவ் கங்குலி

இவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கங்குலி. இவர் குறித்து சாப்பெல் கூறியது, கங்குலி சிறந்த கேப்டனாக விளங்கினார். ஆனால் அவர் சரியான முடிவுகளை எடுக்கத்தெரியாதவர். 2003க்கு பின்னர் இவர் மிகவும் சோம்பேறியாகவும், தேவையில்லாமல் பல போட்டிகளில் ஓய்வினையும் பெற்றுவந்தவர்.போட்டிகளில் ஓய்வு பெற்றதே இவரின் கேப்டன்ஸியை காப்பாற்றியது.

#2) வீரேந்தர் ஷேவாக்

ஷேவாக்கை பொறுத்தவரையில் சிறந்த ஆட்டக்காரர். அனைத்து பந்துகளையும் வெளுத்து வாங்கும் தன்மை கொண்டவர். ஆனால் அணியில் இவர் தனது 50 % பங்களிப்பை மட்டுமே செலுத்துவார். முழுமையான பங்களிப்பினை ஒருமுறை கூட செலுத்த மாட்டார்.

#3) சச்சின் டெண்டுல்கர்

Chappell with sachin and dravid
Chappell with sachin and dravid

கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த வீரர் சச்சின். ஆனால் தேவையில்லாமல் உலககோப்பைக்கு தன்னை நான்காம் இடத்தில் களமிறங்கி தனது இயல்பான ஆட்டத்தை அவர் ஆடாததே இவர் செய்த தவறு.

#4,5) டிராவிட் மற்றும் கும்ப்ளே

இருவரும் இந்திய அணியின் சிறந்த, தன்மையான, அர்பணிப்பான வீரர்கள். தங்களது அணிக்காக அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்றவர்கள். அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்க்காக உண்மையாக போராடுபவர்கள். இருவரும் சிறந்த தலைவர்கள். இந்தியா சிறந்த அணியாக விளங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

#6) ஜாகீர் கான்

பந்துவீச்சில் இவர் இந்தியாவின் தலைசிறந்த வீரராக விளங்கலாம். ஆனால் உண்மையிலேயே இவர் மிகவும் சோம்பேறித்தனமான வீரர். உடல் தகுதியை கூட சரியாக கவனித்து கொள்ள மாட்டார். எப்போதும் இவர் உடலளவில் தகுதி பெற மாட்டார். அதனை முன்னேற்றவும் இவர் மிகவும் வைராக்கியம் காட்டுபவர்.

#7) மகேந்திர சிங் தோணி

MS Dhoni
MS Dhoni

இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தோணி தான். இவரை போல கிரிக்கெட் மூளை வேறு எவருக்கும் கிடையாது. உண்மையான அணியின் கேப்டன் இவர் தான். இந்திய அணி உலககோப்பையை வெல்வதற்கு, டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பிடித்ததற்கும் காரணமே இவர் தான். ஆனால் அதனை எப்போதும் வெளிக்காட்டி கொள்ள மாட்டார். அதுவே இவரின் சிறப்பு.

#8,9) ரெய்னா மற்றும் இர்பான் பதான்

இருவரும் திறமையான மற்றும் உடல் தகுதியான வீரர்கள். அவர்களிடம் நல்ல பல ஆலோசனைகள் இருக்கும். ஆனால் அதனை அணியில் கூற மூத்த வீரர்களை கண்டு பயப்படுவார்கள்.

Quick Links

Edited by Fambeat Tamil