உலககோப்பை தொடரில் ஆஸ்திரோலியா அணி கேப்டன்களின் சாதனையை முறியடித்த பின்ச்

Pravin
ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் பல்வேறு நகரங்களில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த உலககோப்பை தொடர் நடைபெறும் இடமான இங்கிலாந்தில் தற்பொழுது மழை பொய்து வருவதால் உலககோப்பை தொடரின் ஒருசில ஆட்டங்கள் நடைபெறாமல் பாதிப்படைந்து வருகின்றது. இந்நிலையில் உலககோப்பை தொடரின் 20வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இதில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கடைசியாக விளையாட இருந்த இரண்டு போட்டிகளும் மழையால் பாதிப்பை அடைந்து ரத்து செய்யப்பட்டது. இலங்கை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாட களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் வழக்கமான தொடக்க ஜோடி டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினர்.

ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

வழக்கம் போல் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தாமல் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடி இந்த ஜோடி முதல் பத்து ஓவர்களுக்கு விக்கெட்டை இழக்காமல் விளையாடியது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய டேவிட் வார்னர் இந்த போட்டியில் 26 ரன்னில் இலங்கை வீரர் தனஜெயா டி சில்வா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் பின்ச் உடன் இணைந்து விளையாடிய காவாஜா 10 ரன்னில் அதே தனஜெயா டி சில்வா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் பின்ச் உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இலங்கை அணியின் பந்து வீச்சை சிதறடிக்க கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக தனது 14வது ஓடிஐ சதத்தை பதிவு செய்தார்.

ஆரோன் பின்ச் 153
ஆரோன் பின்ச் 153

ஆரோன் பின்ச்-க்கு இதுவே இந்த உலககோப்பை தொடரின் முதல் சதமாகும். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஆரோன் பின்ச் 150 ரன்களை கடந்தார். ஆரோன் பின்ச் இந்த போட்டியில் சதம் அடித்ததன் முலம் உலககோப்பை தொடரில் சதம் விளாசிய மூன்றாவது ஆஸ்திரோலியா அணியின் கேப்டன் என்ற சாதனையை படைத்தார். அதோடு மற்றோரு சாதனையாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்-கின் அதிகபட்சமாக உலககோப்பை தொடரில் அடித்த 140 ரன்களை பின்ச் இந்த போட்டியில் கடந்ததன் மூலம் ஆஸ்திரேலியா கேப்டனின் அதிகபட்ச ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். பின்ச் 153 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 334 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்டிவன் ஸ்மித் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Quick Links

Edited by Fambeat Tamil