இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி 

Pravin
ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் போட்டி 17
ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் போட்டி 17

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்த உலககோப்பை தொடரின் 17வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சேம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடியது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வீசிய அனைத்து பந்துகளையும் இந்த ஜோடி பவுண்டரிகளாக விளாசியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 146 ரன்களை குவித்தது. கேப்டன் பின்ச் அதிரடியாக அரைசதம் விளாசி 82 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகி வெளியேற அடுத்தாக களம் இறங்கினார் ஸ்டிவன் ஸ்மித் அவரும் 10 ரன்னில் முகமது ஹபிஸ் பந்தில் அவுட் ஆகினார்.

முகமத் அமீர்
முகமத் அமீர்

அடுத்த வந்த கிளன் மேக்ஸ்வெல் 20 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய வார்னர் 107 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜா 18 ரன்களும் ஷான் மார்ஷ் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த கூல்ட்டர் – நைல் 2 ரன்னிலும் கம்மிங்ஸ் 2 ரன்னிலும் அவுட் ஆக கேரி 20 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகினார். அமீர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் அடித்தது.

ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி

அதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் அதிர்ச்சி அளிக்கும் விதாமாக டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய பாபர் ஆஷம் 30 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் நிலைத்து விளையாடினார். இமாம் -உல்-ஹக் அரைசதம் விளாசிய நிலையில் 53 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஹபிஸ் 46 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கேப்டன் ஷப்ஃராஸ் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் மற்ற வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

வாஹப் ரியாஸ்
வாஹப் ரியாஸ்

கடைசி நேரத்தில் ஷப்ஃராஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வாஹப் ரியாஸ் அதிரடியாக 45 ரன்கள் சேர்த்தார். அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கடைசியாக கேப்டன் ஷப்ஃராஸ் 40 ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links