பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி

Pravin
லசித் மலிங்கா
லசித் மலிங்கா

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உலககோப்பை தொடரின் 27வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. இந்த உலகோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இலங்கை அணி இந்த உலககோப்பை தொடரில் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைபில் இரு அணிகளும் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் பேட்டிங் செய்ய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசல் பெரேரா மற்றும் கேப்டன் கருணரத்னே இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில் முதல் ஓவரிலேயே இலங்கை அணி வீரர்கள் தடுமாறிய நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் கருணரத்னே 1 ரன்னில் அவுட் ஆகினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே குசல் பெரேரா 2 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய அவிஷ்க பெர்னான்டோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் குசல் மென்டிஸ். அதிரடியாக விளையாடிய பெர்னான்டோ 39 பந்தில் 49 ரன்கள் அடித்து மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார்.

ஆஞ்சிலோ மேதிவுஸ்
ஆஞ்சிலோ மேதிவுஸ்

அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஆஞ்சிலோ மேத்திவ்ஸ் கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய குசல் மென்டிஸ் 46 ரன்னில் ஆடில் ரஷித் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜீவண் மென்டிஸ் அடுத்த பந்திலேயே டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய தனஜெயா டி சில்வா நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஆஞ்சிலோ மேத்திவ்ஸ் அரைசதம் விளாசினார்.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

தனஜெயா டி சில்வா 29 ரன்னில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய திசேரா பெரேரா 2 ரன்னில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து வந்த உதனா 6 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து மலிங்காவும் 1 ரன்னில் அதே மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 239-9 ரன்களை அடித்தது. இலங்கை அணியின் மேதிவுஸ் கடைசி வரை ஆட்டம் இலக்காமல் 85 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்கள் மற்றும் ஆடில் ரஷித் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்

அதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் இருவரும் களம் இறங்கினர். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை மலிங்கா வீசிய நிலையில் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்ரோ டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட் இங்கிலாந்து அணிக்கு பேரிழப்பாக பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாடினார்.

மலிங்கா
மலிங்கா

வின்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்காவின் பந்து வீச்சில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் 21 ரன்னில் உதனாவின் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து நிலைத்து விளையாடிய ஜோ ரூட் 57 ரன்னில் மலிங்காவின் வேகபந்தில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் சிறப்பான பாடனர்ஷிப் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாஸ் பட்லர் 10 ரன்னில் மீண்டும் மலிங்காவின் பந்து வீச்சில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 144-5 என்ற நிலைக்கு சென்றது.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

அடுத்து களம் இறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஆடில் ரஷித் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தனஜெயா டி சில்வா பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். நிலைத்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார். கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் இலங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற நிலையில் மறுமுனையில் இருந்த மார்க் வுடின் விக்கெட்டை பிரதிப் வீழ்த்திய நிலையில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links