ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல சாதனைகளை முறியதடித்த ஷிகார் தவண் மற்றும் இந்திய அணி

Pravin
ஷிகார் தவண்
ஷிகார் தவண்

கிரிக்கெட் விளையாட்டின் பிரமாண்ட தொடரான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடர் கடந்த 2015ம் ஆண்டு உலககோப்பை தொடரை காட்டிலும் வித்தியாசமாக ரவுண்டு ராபின் முறையில் நடைபெறுகின்றது. இந்த உலககோப்பை தொடர் முதல் 10 லீக் போட்டிகளை கடந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியா அணி இதுவரை ஒரு லீக் போட்டி மட்டுமே விளையாடி உள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டியில் மிக வலுவான ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை கம்மிங்ஸ் வீசினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதலில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினார் ஷிகார் தவண். அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் ரோஹித் சர்மா. தொடர்ந்து இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 127 ரன்களை சேர்த்தது. ரோஹித் சர்மா அரைசதம் விளாசிய நிலையில் 57 ரன்னில் கூல்ட்டர் நைல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஷிகார் தவண் சதம் விளாசி அசத்தினார்.

ஷிகார் தவண்
ஷிகார் தவண்

ஷிகார் தவண் ஒரு நாள் போட்டியில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதம் தவணுக்கு ஐ.சி.சி தொடர்களில் 6வது சதமாகும் . இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி இருவரும் 7 சதங்களை அடித்துள்ளனர். ரிக்கி பாண்டிங், சங்ககாரா மற்றும் தவண் ஆகியோர் 6 சதங்களை அடித்துள்ளனர். இந்த பட்டியலில் புதியதாக சேர்ந்தார் தவண். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷிகார் தவண் 117 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். ஷிகார் தவண் இந்த போட்டியில் 117 ரன்கள் அடித்ததன் முலம் உலககோப்பை தொடரில் ஆஸ்திரோலியா அணிக்கு எதிராக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார் ஷிகார் தவண்.

வீராட் கோலி
வீராட் கோலி

இதற்கு முன்னர் அஜய் ஜடேஜா அடித்த 100 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்திய அணியில் கோலி 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 48 ரன்களும் தோனி 27 ரன்களும் அடிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 352 ரன்களை குவித்தது. இதன் முலம் இந்திய அணி உலககோப்பை தொடரில் ஆஸ்தகரேலியா அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Quick Links

Edited by Fambeat Tamil