Create
Notifications
New User posted their first comment
Advertisement

ஓரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இங்கிலாந்து அணி வீரர்கள்

ஜேன்னி பேஸ்ரோ
ஜேன்னி பேஸ்ரோ
Pravin
ANALYST
Modified 03 Jul 2019, 20:00 IST
Advertisement

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து சர்வதேச நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இதுவரை 40 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து போட்டிகளிலும் கடந்த உலககோப்பை தொடர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகின்றது. இந்த உலககோப்பை தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் 300+ ஸ்கோர்கள் எளிதில் அடிக்கும் அளவிற்கு உள்ளதால் வீரர்கள் ரன் மழை பொழிகின்றனர். இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 41வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்த உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டி இரு அணிகளும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும். இந்த இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டி மட்டுமல்லாமல் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெறும் உலககோப்பை தொடரை வெல்ல முடியும் என்பதால் இந்த போட்டி இங்கிலாந்து பொருத்த வரையில் வாழ்வா சாவா என்ற கோணத்தில் பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்னி பேர்ஸ்டோ ஒரு புதிய சாதனை படைத்தார்.

ஜெசன் ராய்
ஜெசன் ராய்

அதோடு இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரர் ஜோ ரூட் இங்கிலாந்து அணி வீரர்கள் எவரும் படைக்காத சாதனையை இந்த போட்டியில் படைத்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடி இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக சில போட்டிகள் விளையாடமல் இருந்த ஜெசன் ராய் இந்தியா அணியுடனான போட்டியில் அணியில் இணைந்த நிலையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஜெசன் ராய் விளையாடாத இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ மற்றும் ஜெசன் ராய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை எற்படுத்தியது. இருவரும் இந்தியா அணிக்கு எதிரான போட்டியிலேயே அதிரடி காட்டியது போல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி 100+ பாட்னர்ஷிப் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இந்த உலககோப்பை தொடரில் அடிக்கும் முன்றாவது 100+ பாட்னர்ஷிப் ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையை இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்திவ் ஹெய்டன் இருவரும் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நிகழ்த்தினர்.

1 / 2 NEXT
Published 03 Jul 2019, 20:00 IST
Advertisement
Fetching more content...
App download animated image Get the free App now
❤️ Favorites Edit