டேவிட் வார்னர் மற்றும் சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

Pravin
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்த நிலையில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டியில் அனைத்து அணிகளும் இன்னும் எட்டு போட்டிகள் விளையாடி உள்ளது. இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடரில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது இதில் 40வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆசிய அணிகளான இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இந்த இரு அணிகளில் இந்தியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியை இந்தியா அணி எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த போட்டி வங்கதேச அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் இந்த போட்டியை இரு அணிகளும் எதிர்கொள்ளும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்தியா அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார் அதை இங்கு காண்போம்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் உலககோப்பை தொடர்களில் விளையாடும் போட்டி மிகவும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு காரணம் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் வங்கதேச அணி இந்தியா அணியை வீழ்த்தி இந்தியா அணியை உலககோப்பை தொடரில் இருந்து வெளியேற்றியது. அந்த போட்டியில் இருந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் விறுவிறுப்பு கூடியுள்ள நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரிலும் இந்தியா அணி வங்கதேச அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்தியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் களம் இறங்கினர்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

கே.எல் ராகுல் கடந்த சில போட்டிகளில் மோசமான பேட்டிங்கை வெளிபடுத்தி வரும் நிலையில் இந்த போட்டியில் மெதுவாக ஆட்டத்தை தொடங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா இந்த உலககோப்பை தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்த உலககோப்பை தொடரில் இந்தியா அணிக்காக அதிக சதம் அடித்தவர் ரோஹித் சர்மா. இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த போட்டியில் ஆட்டத்தின் தொடக்கதிலேயே ரோஹித் சர்மா முஸ்ஃபிகுர் ரகுமான் பந்தில் தவறான ஷாட் அடித்த நிலையில் தமீம் இக்பால் கேட்சை தவறவிட்ட நிலையில் ரோஹித் சர்மா அதன் பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் சர்மா சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசிய நிலையில் ரோஹித் சர்மா 80 ரன்கள் அடித்த போது இந்த உலககோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த டேவிட் வார்னரின் ஸ்கோரை முந்தினார். இந்த உலககோப்பை தொடரில் எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் இணைந்து 1000+ ரன்களை குவித்த நிலையில் டேவிட் வார்னர் இந்த உலககோப்பை தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 516 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்த போட்டிக்கு முன்பாக 439 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் டேவிட் வார்னரின் 516 ரன்களை முந்தி இந்த உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அதே போல் ரோஹித் சர்மா இந்த உலககோப்பை தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் 53 பவுண்டரிகளை விளாசி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் டேவிட் வார்னர் மற்றும் ஷகிப் அல் ஹசன் உள்ளனர். அதை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோஹித் சர்மா இந்த உலககோப்பை தொடரில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் 104 ரன்களில் சௌவுமியா சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றொரு சாதனையாக இந்தியா அணிக்காக உலககோப்பை தொடர்களில் அதிக ரன்களை அடித்தவர் என்ற பட்டியலில் 1996 ஆண்டு உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுகர் அடித்த 523 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்தார்.

Quick Links