இங்கிலாந்து அணியை பயிற்சி போட்டியில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி

Pravin
ஸ்டிவ் ஸ்மித்
ஸ்டிவ் ஸ்மித்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றனர். இந்த முறை உலககோப்பை தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த உலககோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற நான்காவது பயிற்சி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இடம் பிடித்த டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். கேப்டன் பின்ச் 14 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆக மறுமுனையில் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். பின்னர் களம் இறங்கிய சான் மார்ஷ் பொறுமையாக விளையாட டேவிட் வார்னர் 43 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகினார்.

England team
England team

சான் மார்ஷ் 30 ரன்னில் அதே ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய முன்னாள் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய உஸ்மான் கவாஜா 31 ரன்னில் லயன் டாஸன் பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 13 ரன்னில் ரன்அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஸ்டிவ் ஸ்மித் சதம் விளாசினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 297-9 ரன்களை அடித்தது.

ஸ்டிவ் ஸ்மித் 116
ஸ்டிவ் ஸ்மித் 116

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜேன்னி பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். வழக்கமாக அதிரடி காட்டும் பேர்ஸ்டோ 12 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து விளையாடிய வின்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் ராய் 32 ரன்னில் கேன் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 20 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். பட்லர் 31 பந்தில் 52 ரன்கள் அடித்து கூல்ட்டர்-நைல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மோயின் அலி சிறிது நேரம் நிலைத்து விளையாட வின்ஸ் அரைசதம் கடந்த நிலையில் 64 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். கடைசி வரை வெற்றிக்கு பேராட்டிய இங்கிலாந்து அணியில் வோக்ஸ் 40 ரன்னில் ரன்அவுட் ஆக மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ப்ளங்கெட் 19 ரன்னில் அவுட் ஆகினார். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Quick Links