முதல் பயிற்சி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 

Pravin
ஷஹிடி 74*
ஷஹிடி 74*

உலககோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் பிரமாண்டமாக இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து அணிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர். உலககோப்பை தொடர் மே 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் பயிற்சி போட்டிகள் தொடங்கியது. முதல் பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் அதிரடி தொடக்க ஆட்டகாரர்கள் இமாம்-உல்-ஹாக் மற்றும் பக்கர் ஜமான் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்த ஜோடி தடுமாறியது. இந்த நிலையில் இமாம்-உல்-ஹாக் 32 ரன்னில் ஹமீது ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பாபர் ஆஷாம் நிலைத்து விளையாட பக்கர் ஜமான் 19 முகமது நபி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ஹரிஸ் சொகைல் 1 ரன்னில் அதே முகமது நபியிடம் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த முகமது ஹபிஸ் 12 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த ஷோயப் மாலிக் பாபர் ஆஷாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

பாபர் ஆஷாம் 112
பாபர் ஆஷாம் 112

இதை அடுத்து நிலைத்து விளையாடிய மாலிக் முகமது நபி பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமது 13 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய பாபர் ஆஷாம் சதம் வீளாசி அசத்தினார். பாபர் ஆஷாம் 112 ரன்னில் டாவ்லட் ஸட்ரன் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் வாசிம், ஹசன் அலி, ஷாதப் கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை அடித்தது.

அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷெஹ்ஸாத் மற்றும் ஹஸ்ரதுல்லா இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஷெஹ்ஸாத் 23 ரன்னில் காயம் அடைந்து வெளியேறினர். அதன் பின்னர் வந்த ரஹ்மத் ஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஹஸ்ரதுல்லா 49 ரன்னில் ஷாதப் கான் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஷஹிடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ரஹ்மத் ஷா 32 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார்.

ஷஹிடி
ஷஹிடி

இதை அடுத்து வந்த வீரர்களில் முகமது நபி மட்டும் நிலைத்து விளையாட ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது. வாஹப் ரியஸ் வீசிய 48 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி கடைசி வரை நிலைத்து விளையாடிய ஷஹிடி 74 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.

Quick Links