ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகளவில் 150 ரன்கள் அடித்த வீரர்களை கொண்ட முதல் நான்கு அணிகள்

David Warner and Rohit Sharma
David Warner and Rohit Sharma

#3.வெஸ்ட் இண்டீஸ் அணி (18)

Chris Gayle
Chris Gayle

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள்150 ரன்களை அதிகமாக 18 முறை அடித்துள்ளனர். இதில் 'யுனிவெர்சல் பாஸ்' என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் 5 முறை 150திற்கு மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் 215 அடித்துள்ளார். மேற்கு இந்திய ஜாம்பவான் பிரையன் லாரா இந்தப் பட்டியலில் மூன்று முறை 150-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இவரும் தனது புகழ்பெற்ற ஒருநாள் போட்டியில் மூன்று முறை 150 ரன்களைக் கடந்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் ஷை ஹோப் மற்றும் எவீன் லீவிஸ் ஒருமுறை 150 ரன்கள் அடித்துள்ளனர்.

#4. தென்னாப்பிரிக்கா அணி (15)

AB de Villiers
AB de Villiers

தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஹாசிம் அம்லா ஒருநாள் தொடரில் பலமுறை 150-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதாரான போட்டியில் அம்லா 159 ரன்களை குவித்துள்ளார். குயின்டன் டி கோக், ஏபி டிவில்லியர்ஸ், மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் அனைவரும் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 150 ரன் தாண்டியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் 175 ரன்கள் அடித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 2017 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்கள் குவித்துள்ளார். ஜே.பி. டுமினி, ஆண்ட்ரூ ஹட்சன், கேரி கிர்ஸ்டன், ஃபாஃப் டு பிளெசிஸ், மற்றும் டேவ் கல்லாகன் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 150 ரன்கள் அடித்துள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil