Ind vs wi: முதல் ஓடிஐ தொடர் முன்னோட்டம், போட்டி விவரங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கணிக்கப்பட்ட  11 !!

India vs west indies - 1st odi preview
India vs west indies - 1st odi preview

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்றுபயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து ஒருநாள் சர்வதேச தொடரில் இன்று பங்கேற்க உள்ளது. இந்த போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சர்வதேச ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயமாக ஒரு வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்புவார், மேலும் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் வருகையால் அணிக்கு பலமாக இருக்கிறது. எனவே, தற்போது முதல் சர்வதேச ஓருநாள் தொடரின் பற்றியை முன்னோட்டம், அணியின் விவரங்கள் மற்றும் விளையாடும் 11 வீரர் போன்றவற்றை காண்போம்.

போட்டி விவரங்கள்:

தேதி: ஆகஸ்ட் 8 (வியாழக்கிழமை)

நேரம்: இரவு 7:00 மணி அளவில் தொடங்குகிறது.

இடம்: பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானா

வானிலை தகவல்:

கயானாவில் நாளை மழை பெய்யும் என்பதால் முதல் ஓடிஐ தொடருக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். ஏனெனில், வானிலை முன்னறிவிப்பு மையம் நாளை மதியம் வரை மழை தொடர்ந்து இருக்கும் என்று கணித்துள்ளதால் முழு 50 ஓவர் பட்டியல் பெறுவது கடினமாக இருக்கும்.

நேருக்குநேர் மோதிய புள்ளிவிவரங்கள்: மொத்தம் விளையாடியது: 127

மேற்கிந்திய தீவுகள்: 62

இந்தியா: 60

சமம்: 2

முடிவற்ற போட்டிகள்: 3

அணி விவரங்கள்

1. வெஸ்ட் இண்டீஸ்

பேட்டிங் பார்வையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார். கனடாவில் நடைப்பெற்ற உள்ளூர் தொடரில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக விளையாடி மீண்டும் தனது வானவேடிக்கையை வெளிப்டுத்தியதால் தற்போது இவர் சிறப்பான நிலையில் இருக்கிறார். கிறிஸ் கெயில் தொடக்க ஆட்டக்காரராக எவின் லூயிஸ் உடன் களமிறங்குவார். இதன் பிறகு ஜான் காம்ப்பெல், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் மற்றும் சிம்ரான் ஹெட்மியர் ஆகிய முக்கிய நட்சத்திர பேட்ஸ்மன்கள் உள்ளனர்.

India vs west indies
India vs west indies

உலகக் கோப்பையில் கார்லோஸ் பிராத்வைட்டுடன் ஷெல்டன் கோட்ரல் ஜோடியில் சிறப்பான பந்தவீச்சை வெளிப்படுத்தினர். எனவே, அதே வேகத்துடன் ஷெல்டன் கோட்ரல் மீண்டும் பந்துவீச்சுவார் என்பதால் முக்கிய பந்துவீச்சாளராக கருத்தப்படுகிறார். இந்தபோட்டியில் ஃபேபியன் ஆலன் ஒருவர் மட்டுமே ஸ்பின் பவுலராக உள்ளனர், எனவே தேவைப்பட்டால் கிறிஸ் கெய்ல் சில ஓவர்களை வீசுவார்.

2. இந்திய அணி

இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருப்பதால் இதில் எந்தொரு மாற்றங்களும் இருக்காது, அதே நேரத்தில் கே.எல்.ராகுல் 1-வது ஒருநாள் போட்டிக்கு 4-வதாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். மனிஷ் பாண்டேவின் தோல்விகளால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ரிஷாப் பந்த் விக்கெட் கிப்பராக உள்ளார்.

டி 20 ஐ தொடரில் புவனேஷ்வர் குமார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மேலும் அவர்கள் ஒருநாள் போட்டிகளிலும் அதே வழியில் தொடர்வார்கள். முகமது ஷமி உலகக்கோப்பை தொடர் போல் இதிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா பவுலிங் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாடும் 11 வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல் மற்றும் ஓஷேன் தாமஸ்.

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் / கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ்.

Quick Links

Edited by Fambeat Tamil