Create
Notifications
Favorites Edit
Advertisement

2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்

Sathishkumar
ANALYST
சிறப்பு
1.35K   //    19 Jun 2019, 09:00 IST

Bhuvneswar Kumar's untimely injury has upset India's team balance
Bhuvneswar Kumar's untimely injury has upset India's team balance

இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானிற்கு எதிரான கடந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது இந்தியா.

உலகக்கோப்பை வரலாற்றில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக 6 முறை வெற்றி பெற்றிருந்தது. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் வென்றது ஆச்சரியம் அளிக்கும் விதமாக இல்லை. 

ரோகித் சர்மா விளாசிய 140 ரன்கள் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அத்துடன் மற்ற வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக மற்றொரு வெற்றியை இயல்பான பெற முடிந்தது.

பாகிஸ்தானகற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே சோதனை இந்திய நட்சத்திர பௌலர் புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே.

அந்தப் போட்டியில் அவரது மூன்றாவது ஓவரை வீசிய போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் அடுத்த 3 உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார் புவனேஸ்வர் குமார். இந்திய அணி ஏற்கனவே 3 வாரங்கள் ஷீகார் தவானின் பங்களிப்பை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தவானிற்கு மாற்று வீரராக களம் கண்ட தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி

In Mohammed Shami, India has a ready replacement for Bhuvi
In Mohammed Shami, India has a ready replacement for Bhuvi

இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்கு சிறந்த மாற்று வீரராக தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் முகமது ஷமி இருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறப்பான விக்கெட் வீழ்த்தும் திறன் மீண்டும் இவ்வருட தொடக்கத்தில் வெளிபட்டது. அதனால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணில் நடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அத்துடன் நியூசிலாந்திற்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆடும் XI ல் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் 2015 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்போது புவனேஸ்வர்க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் உடனடி மாற்று வீரராக முகமது ஷமி ஆடும் XIல் சேர்க்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. முகமது ஷமி புவனேஸ்வர் குமாருக்கு சரிசமமான அனுபவத்தை ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் வைத்துள்ளார். ஆட்டத்தின் தொடக்கம், மிடில், இறுதி என அனைத்திலும் அதிரடியாக வீசும் திறமை கொண்டவர். தற்போது இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுள் முகமது ஷமி மட்டுமே அதிக உலகக்கோப்பை அனுபவத்தை தன்வசம் வைத்துள்ளார். இவர் 17 விக்கெட்டுகளை 2015 உலகக்கோப்பையில் வீழ்த்தியுள்ளார். இந்த அனுபவம் இந்திய அணிக்கு தற்போது தேவைப்படுகிறது.

1 / 3 NEXT
Tags:
Advertisement
Advertisement
Fetching more content...