இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் 2018: 5 காரணங்களுக்காக 3வது T20I நாம் பார்க்க வேண்டும்

RoHIT
RoHIT

கல்கத்தாவில் கொஞ்சம் கடினமாகவும், லக்னோவில் மிக எளிதாகவும் வென்று இந்தியா 2 டி20 போட்டிகளையும் வென்று தொடரை எளிதாக வென்றுள்ளது.ரோகித் சர்மாவின் தலைமையில் மூன்றாவது டி20(சம்பிரதாய போட்டி) போட்டியைச் சென்னையில் எதிர்கொள்ளும் தயாராக உள்ளது. தொடரை வென்றாலும் 3வது போட்டி சம்பிரதாய போட்டியாகவே இருந்தாலும் போட்டியின் சுவாரஸ்யம் என்றுமே குறையாது.இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் இந்தியா டி20யில் மேற்கிந்திய தீவுகள் அணியை வைட்-வாஸ் செய்ய வேண்டும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

#5.மேற்கிந்தியத்தீவுகள் அணி இறக்கம் கண்டுள்ளதே தவிர அவர்களுடைய ஆட்டத்திறன் என்றும் இறக்கம்

Windies
Windies

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தச் சீரிஸில் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது என்பது ஒரு சந்தேகம் இல்லாமல் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.ஆனால் அந்த அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் இந்திய ஆடுகளத்திலேயே இந்திய பௌளர்களையும், பேட்ஸ்மேன்களையும் திணறடித்தனர் என்பது எவறாலும் மறுக்க முடியாது உண்மையாகும்.

இந்தத் தொடரில் டி20 போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் வரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மேல் டி20 போட்டிகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.ஆனால் லக்னோவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மோசமான ஆட்டத்தால் அந்நாட்டு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமடைந்தனர்.T20யில் உலகச் சேம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களிடையே அவர்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.இந்த வருடத்தில் 11 டி20 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவிற்கெதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியிலாவது அதிரடியாக வென்று மிக வலுவான டி20 அணியென நிருபிப்பார்களா என ஆவலுடன் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

#4.தவான் சொதப்பல், கே எல் ராகுல் அசத்தல்

KL Rahul
KL Rahul

"கபார்" என்றழைக்கப்படும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் லக்னோவில் சிறப்பான ஒரு 43 ரன்கள் அடித்து ரோகித் சர்மா சதம் விளாச உதவினார்.ஆனால் தாவானின் ஆட்டத்திறன் ஆசியக் கோப்பைக்குப் பிறகு சரியில்லை என்பதே உண்மையாகும்.அவர் மிகவும் எளிதாக தனது விக்கெட்டுகளை எதிரணியிடம் கொடுத்து விடுகிறார்.தொடக்க ஆட்டக்காரராக இவர் தன் பணியைத் சரியாக செய்யவில்லை.

இவருடைய இடத்திற்கு மாற்றாக கே.எல்.ராகுல் இறக்கப்படாலாம். கே.எல்.ராகுல் ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியான ஷாட்களை விளாசித் தள்ளினார்.டும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் லக்னோவில் சிறப்பான ஒரு 43 ரன்கள் அடித்து ரோகித் சர்மா சதம் விளாச உதவினார்.ஆனால் தாவானின் ஆட்டத்திறன் ஆசியக் கோப்பைக்குப் பிறகு சரியில்லை என்பதே உண்மையாகும்.அவர் மிகவும் எளிதாக தனது விக்கெட்டுகளை எதிரணியிடம் கொடுத்து விடுகிறார்.தொடக்க ஆட்டக்காரராக இவர் தன் பணியைத் சரியாக செய்யவில்லை.

தவானின் தொடக்கம் அவ்வளவாக இந்தத் தொடரில் சோபிக்கவில்லை. எனவே கடைசி டி20 போட்டியில் கே.எல்.ராகுல் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

#3.ரிஷப் பண்ட் தன்னை நிருபிக்க சரியான போட்டி

Pant
Pant

தனது அதிரடியான பேட்டிங் திறமையைப் பயன்படுத்தி இந்திய அணித் தேர்வாளர்களை தம் பக்கம் திருப்பி அணைத்து போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றவர் ரிஷப் பண்ட்.டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடித் தன்னை நிறுபித்தவர் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிறுபிக்க தவறிவிட்டார். ஐ.பீ.எல் போட்டியே இவரை இந்திய அணிக்கு வர பெரிதும் உதவியது.

இவர் இளம் வயதிலேயே இந்திய அணிக்குள் நுழைந்து கலக்கியிருக்கிறார். எதிர்காலத்தில் ரிஷப்பண்டிற்கு இந்திய அணியில் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது.இவர் கடந்த இரு தொடரிலும் கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி வருகிறார்.ரிஷப்பண்ட் விக்கெட்கீப்பர் அதனால் தோனிக்குப் பிறகு இவரே இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடர் அவரை மேம்படுத்த சிறந்த தொடர்பாகவும் இருந்துள்ளது.

#2.புவனேஷ்வர் குமாரின் டி20 ஃபார்ம்

Bhuvi
Bhuvi

ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் க்ளாஸ் என்பது நிரந்தரம் என்பதை புவனேஸ்வர் குமார் இந்தத் தொடரில் நிறுபித்துள்ளார். புவனேஷ்வர் குமார் ஒரு இந்திய அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக உள்ளார்.லக்னோவில் நடைபெற்ற டி20 போட்டியில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பவர் ஃபிளேவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களை எளிதாக வீழ்த்தி விடுகிறார்.ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவருடைய ஃபார்ம் குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.

கடைசி டி20போட்டியில் இவருடைய அதிரடி பந்துவீச்சு தொடருமா என்பதை பார்க்க நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.ஏனேனில் சேப்பாக்கம் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகும்.சில ஆண்டுகலாக சென்னையில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை.ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுவந்தது.அப்பொழுது 200 அடித்தாலும் சேஸிங் செய்யக்கூடியாதகவே இந்த மைதானம் இருக்கும்.எனவே புவனேஸ்வர் குமாருக்கு இப்போட்டி சற்று கடினமாக இருக்கும் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.

#1.அடுத்த இலக்கை நோக்கி இந்திய அணி

Indian Team
Indian Team

இந்திய அணி ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை. வென்று விட்டது.அடுத்த தொடரில் ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே சந்திக்க தயாராகி வருகிறது.அதனால் குல்திப்யாதவ், உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.கடைசி டி20 போட்டியில் குல்திப்பிற்கு பதில் சாலும், புமராவிற்கு பதில் சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சித்தார்த் கவுல் சர்வதேச போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்.அவர் இன்னும் தன்னை முழுமையாக நிறுபிக்கவில்லை.ஸ்பின் பௌலிங்கில் உலகின் டாப் 10 பந்துவீச்சாளர்களுள் ஒருவரான சகால் நன்றாக பந்து வீசி வருகிறார்.இறுதி டி20யில் தன்னை முழுமையாக நிறுபிக்கும் போட்டியாக சகாலுக்கு அமையும். மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான கடைசி டி20 போட்டியே இவ்வருடத்தில் இந்திய அணி தனது மண்ணில் விளையாடும் இறுதிப் போட்டியாகும்.எனவே சேப்பாக்கம் ஆடுகளத்தில் ரன் மழை எதிர் பார்க்கலாம்.

Quick Links