2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள் 

Kane Williamson and Dinesh Karthik ( image courtesy: iplt20.com )
Kane Williamson and Dinesh Karthik ( image courtesy: iplt20.com )

2019 ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றில் எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தின் மோதவிருக்கின்றன. நாளை மறுதினம் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் விசாகப்பட்டினத்தில் சந்திக்கின்றன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது, மும்பை இந்தியன்ஸ் அணி. இதன்மூலம், கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.

இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்தது. மற்ற அணிகளை விட கூடுதல் ரன் ரேட் வைத்திருந்த காரணத்தால் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்த முதல் அணி என்ற வரலாறு படைத்தது. 2016 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பழிவாங்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. அவ்வாறு, நடப்பு தொடரிலும் இத்தகைய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

#1.ஐபிஎல் 2016, ஹைதராபாத் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது - வெளியேற்றுதல் சுற்று:

SRH beat KKR by 22 runs in the eliminator in 2016 ipl
SRH beat KKR by 22 runs in the eliminator in 2016 ipl

2016 ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்திருந்தது. இதன்படி, 163 ரன்களை இலக்காக துரத்தியபோது கொல்கத்தா அணியால் 140 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இறுதியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் 31 ரன்களையும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

#2.ஐபிஎல் 2017, கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது - வெளியேற்றுதல் சுற்று:

KKR beat SRH by 7 wickets in the eliminator in 2017 ipl
KKR beat SRH by 7 wickets in the eliminator in 2017 ipl

2017 வெளியேற்றுதல் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஐதராபாத் அணியின் ரன் வேகத்தை குறைத்தனர். இருப்பினும், ஆட்டத்திற்கு இடையே மழை குறுக்கிட்டதால், கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்களை குவித்தால் வெற்றி பெரும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய கொல்கத்தா அணி முதல் 7 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்த போதிலும் கேப்டன் கம்பீரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நாதன் கவுல்டர் நைல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

#3.ஐபிஎல் 2018, ஹைதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது -தகுதிச்சுற்று:

SRH beat KKR by 14 runs in the qualifier
SRH beat KKR by 14 runs in the qualifier

2018 ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதிச்சுற்றில் முதல் முறையாக இவ்விரு அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 174 ரன்களை அதிரடியாக குவித்தது. இதன்படி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் 80 ரன்கள் குவித்து இருந்தது. இருப்பினும், ரசித் கானின் அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணி ரன்களை குவிக்க சற்று சிரமப்பட்டது. 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. 34 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆல்ரவுண்டர் ரசித் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

#4.ஐபிஎல் 2019, மும்பையிடம் கொல்கத்தா தோல்வியுற்றதால் ஹைதராபாத் அணிக்கு பிளே ஆஃப் சுற்று கிடைத்தது:

Since KKR lost to MI, SRH got into the playoffs
Since KKR lost to MI, SRH got into the playoffs

நேற்று நடைபெற்ற தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இருப்பினும், மும்பை அணியின் அபார பந்துவீச்சால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 133 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் பின்னர், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரிலிருந்து கொல்கத்தா அணி வெளியேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 வெற்றி புள்ளிகளுடன் கூடுதல் ரன் ரேட்டை வைத்து இருந்த காரணத்தினால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

எனவே மேற்கூறிய நான்கு நிகழ்வுகளும் இவ்விரு அணிகளுக்கு இடையே கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற பழிவாங்கிய சம்பவங்களாகும்

Quick Links

Edited by Fambeat Tamil