ஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்

Which Indian debutant will make the most impact?
Which Indian debutant will make the most impact?

#3 ப்ரப்ஸிம்ரன் சிங் ( கிங்ஸ் XI பஞ்சாப்)

Prabhsimran Singh
Prabhsimran Singh

ப்ரப்ஸிம்ரன் சிங் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக சற்று அதிக தொகயாக 4.8 கோடிக்கு வாங்கப்பட்டார். 18 வயதான இவர் ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். 23 வயதிற்குட்பட்டோருக்கான மாவட்ட தொடரில் 301 பந்துகளை எதிர்கொண்டு 298 ரன்களை குவித்ததன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை தம் பக்கம் இழுத்தார். இந்த சிறப்பான ஆட்டம் அரையிறுதியில் அமிர்தசரஸ் அணிக்கு எதிராக வந்தது.

இதன் மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய தேசிய அணியில் இடம் பிடித்தார். இவரது சிறப்பான பங்களிப்பினால் சமீபத்தில் முடிந்த ஆசிய எமர்ஜிங் கோப்பையில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. இவரது உறவினர் சகோதரரான அன்மோல் பிரிட் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

ப்ரப்ஸிம்ரன் சிங் முன்னாஸ் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்டை போல் அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ளார். இவர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக அவ்வளவாக சோபிக்கவில்லை. மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் விளாசினார்.

வலதுகை பேட்ஸ்மேனான இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளார். லோகேஷ் ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் விக்கெட் கீப்பங்கில் சிறந்தவராக இல்லை. ப்ரப்ஸிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங்கை நிச்சயமாக வெளிபடுத்துவார்.

Quick Links

Edited by Fambeat Tamil