ஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்

Which Indian debutant will make the most impact?
Which Indian debutant will make the most impact?

#2 சிவம் தூபே (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

Shivam dhubae
Shivam dhubae

பெங்களூரு அணி சிவம் தூபேவை 5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். மும்பையில் பிறந்த ஆல்-ரவுண்டரான இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முஷ்டாக் அலி கோப்பையில் 2 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

25 வயதான இவர் முதல்தர கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தியுள்ளார். சிவம் தூபே ரஞ்சிக் கோப்பையில் பரோடா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 6 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசினார். அதிகம் மதிப்பிடப்பட்டுள்ள இவர் மும்பை பிரிமியர் டி20 லீக்கில் பிரவின் தாம்பே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார்.

சிவம் தூபே பெங்களூரு அணியில் 6வது அல்லது 7வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு ஃபினிஸராக திகழ்வார் என தெரிகிறது. இவர் அதிகமாக கபில் தேவுடன் ஒப்பிடப்படுகிறார். தென்னாப்பிரிக்கா ஆல்-ரவுண்டர் ஜாக்கஸ் காலீஸ் போன்று சிவம் தூபே செயல்பட்டு பெங்களூரு அணிக்காக தனது ஆட்டத்தை 2019 ஐபிஎல் தொடரில் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 8 ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி 52.66 சராசரியுடன் 632 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் பௌலிங்கில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆல்-ரவுண்டர் சென்னை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக களமிறங்குவார் என தெரிகிறது. ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியின் அனுபவத்தை பெற இவருக்கு மிகவும் உதவிகரமாக இந்த ஐபிஎல் தொடர் சிவம் தூபே-விற்கு அமையும்.

Quick Links

Edited by Fambeat Tamil