ஐபிஎல் 2019: திறமை வாய்ந்த ஆந்திரே ரஸ்ஸலை கொண்டு யுத்தியை கடைப்பிடிக்க தவறினார், தினேஷ் கார்த்திக்

Andre Russell (picture courtesy: BCCI/iplt20.com)
Andre Russell (picture courtesy: BCCI/iplt20.com)

பன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் இருந்தது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர் முழுவதுமே தனது சிறப்பான மாயஜால ஆட்டத்தால் ரசிகர்களை திருப்திபடுத்தியது மட்டுமல்லாமல் அணியையும் பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆந்திரே ரசல். தாம் டாப் ஆர்டர் பேட்டிகளில் களமிறக்கப்பட வேண்டுமென்று பல முறை கூறிவந்துள்ளார், இந்த ஆல்ரவுண்டர். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது கொல்கத்தா அணி.

"We shouldn't depend on Russell all the time." - karthik

ஒன்பது ஓவர்களின் முடிவில் கிறிஸ் லின் விக்கெட்டை இழந்து 56 ரன்களை குவித்து இருந்தது. இந்நேரத்தில் ரசலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார். ராபின் உத்தப்பா உடன் இணைந்து 26 பந்துகளில் வெறும் 16 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். தினேஷ் கார்த்திக் இந்நேரத்தில் ஆல்ரவுண்டர் ரசல் களமிறக்க பட்டிருந்தால், கூடுதலாக ரன்களை குவித்து இருப்பார். ஆனால், பின் வரிசையில் களமிறங்கிய இவர் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் தினேஷ் கார்த்திக் நாங்கள் ரசலை அனைத்து நேரங்களிலும் சார்ந்து இருக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

இவரின் கூற்றை மற்ற இரு அணி வீரர்களிடையே ஒப்பிடும்போது,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 2019 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். இவர் விளையாடிய 12 போட்டிகளில் 692 ரன்களைக் குவித்திருந்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக தொடக்கம் அமைத்து, அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதனால், ஹைதராபாத் அணி பல வெற்றிகளை குவித்து இருந்தது.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வீரரான மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா, இந்த ஐபிஎல் தொடரில் 15 ஓவர்களில் களமிறங்கி ஆட்டம் முடியும் வரை பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், மும்பை அணி பல கவுரவமான ஸ்கோர்களிலிருந்து இமாலய ஸ்கோர்களை எட்டியுள்ளது. இதேபோல், பந்துவீச்சிலும் 14 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மும்பை அணி நிர்வாகம் இவரை குறைந்தது 15 பந்துகள் சந்திக்கும்படி கூறி முன்னதாகவே களமிறக்கியுள்ளது.

எப்படி இந்த தினேஷ் கார்த்திக் மனநிலையை வைத்து, ஒப்பிடும்போது இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன? ஏன் கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை?

நிச்சயம் ரசலை கொண்டு யுக்தியை கடைபிடிக்க தவறிவிட்டார், தினேஷ் கார்த்திக் . 120 பந்துகளை கொண்ட ஒரு டி20 இன்னிங்ஸ் சிறந்த பேட்ஸ்மேனை மிகவும் சார்ந்துள்ளது. சாதாரணமான தருணங்களில் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு ரசல் போன்ற திறமையான பேட்ஸ்மேன் இறுதியில் முடித்து தர வேண்டும். அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன்களைக் குவிக்க தவறிய போதிலும் துருப்புச்சீட்டாக விளங்கும் பேட்ஸ்மேன் கட்டாயமாக ரன் குவித்து அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக தொடரின் பிற்பாதியில், ஒவ்வொரு ஆட்டத்திலும் 8 அல்லது 9 ஓவர்களில் ரசல் களமிறக்கப்பட்டு இருந்தால் கொல்கத்தா அணியின் வெற்றிகள் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனால், கார்த்திக் மற்ற வீரர்களையே பெரிதும் சார்ந்து இருந்தார். அணியில் இடம்பெற்ற ரசல் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க தவறிவிட்டார், தினேஷ் கார்த்திக். இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது.

Quick Links