ஐபிஎல் 2019: 18வது ஓவரை பாசில் தம்பி-க்கு அளித்ததற்கான காரணத்தை விளக்கிய கானே வில்லியம்சன்

Kane Williamson
Kane Williamson

எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் போது கானே வில்லியம்சன் 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்தார். அந்த ஓவரில் 22 ரன்களை ரிஷப் பண்ட் விளாசி ஆட்டத்தின் போக்கை டெல்லி அணிக்கு சாதகமாக மாற்றினார். இதனால் கானே வில்லியம்சனின் கேப்டன்ஷீப் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வள்ளுநர்களால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரிஷப் பண்ட் பாசில் தம்பியின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் 4 பந்துகளிலேயே 20 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.

கலீல் அகமது 11வது ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன் ஏற்றத்தை தடுத்தார். 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கலீல் அகமதுவினை பாசில் தம்பி பந்து வீசிய இடத்தில் வீசச் செய்திருக்க வேண்டும் என பல்வேறு ரசிகர்கள் என தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுமுனையில் கானே வில்லியம்சன் இடதுகை பேட்ஸ்மேனிற்கு வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர் சரியாக இருப்பார் என நினைத்து 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்ததாக தெரிவித்துள்ளார்.

பாசில் தம்பி ரிஷப் பண்ட்-டிற்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் அந்த ஓவரை சரியாஇ பயன்படுத்தி கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் கேப்டன் கானே வில்லியம்சன் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.

தோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கானே வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது:

" பொதுவாக டி20 கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்கள் வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சற்று தடுமாறுவர். ஆனால் ரிஷப் பண்ட் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. கானே வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகமது நபி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கேப்டனுடன் சேர்ந்து கடைநிலையில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி சிறப்பாக முடித்து வைத்தனர். ரிஷப் பண்ட்-டின் சிறப்பான பேட்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகுந்த சாதகமாக இருந்தது.

" இந்த மைதானத்தில் ஆட்டம் மிகவும் நெருக்கமாக செல்லும் செல்லும் என நான் நினைத்திருந்தேன். 162 என்பது ஒரு நல்ல இலக்கு என நான் நம்பினேன். இது ஒரு சவாலான சேஸிங்காக தான் டெல்லி அணிக்கு இருக்கும் என பவர்பிளே ஓவர் முடிந்த பிறகே எனக்கு தெரிந்தது. ஆனால் 18வது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.

2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழு ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. லீக் சுற்றில் 6 போட்டிகளில் வென்று அதன் மூலம் கிடைத்த 12 புள்ளிகளுடனே ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 6 லீக் போட்டிகளில் மட்டும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

Quick Links