முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த கதை 

முருகன் அஸ்வின்
முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் மட்டும் பொதுவானவை அல்ல. அவர்கள் இருவரும் சென்னைக்கு சொந்தமானவர்கள், இருவரின் தாய் மொழி தமிழ், மேலும் இருவரும் எஸ் எஸ் என் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான முக்கிய வித்தியாசம் என்னவென்றால் கிரிக்கெட் மட்டுமே, இருவரும் ஸ்பின்னர்கள் தான் ஆனால் பந்தை திருப்பி செலுத்தும் (ஆஃப் மற்றும் லெக்) திசையில் மட்டுமே மாறுபடுகின்றனர்.

எம் அஸ்வினின் வளர்ச்சியில் ஆர் அஸ்வின்

2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் முருகன் அஸ்வின் இடம் பிடித்தார். முருகன் அஸ்வின் வளர்ச்சியில் ஆர் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். புனே உரிமையாளரால் ஏலத்தில் 4.5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். தற்செயலாக அதே அணியில் ஆர் அஸ்வின் இருந்தார்.

முருகன் அஸ்வின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) இல் திண்டுக்கல் டிராகன் அணிக்கு பெரிய தொகைக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த அணியிலும் ஆர் அஸ்வின் தலைமையின் கீழ் தான் விளையாடினார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் இருவரும் சேர்ந்து விளையாடினர். பஞ்சாப் அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும் தகுதியினை இழந்த நிலையில், எம் அஸ்வினின் பங்களிப்பு அடுத்த தொடரிலும் மிகப்பெரிய அளவில் உதவும் என கேப்டன் ஆர் அஸ்வின் நம்புகிறார்.

"நான் எனக்கான சந்தேகம் வரும்போதெல்லாம், அவரிடம் சென்று என் கேள்விகளுக்குப் பதில் பெற்றுக்கொள்வேன். என் வளர்ச்சியில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்," என்று எம் அஸ்வின் ஒரு பேட்டியில் கூறினார்.

முருகன் அஸ்வின் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்
முருகன் அஸ்வின் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்

முன்னதாக ஆஸ்திரேலிய வேக பந்துவீச்சாளர் ஆண்டி பிச்செல்லிடம், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சக வீரரான முருகன் அஷ்வினை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக வலை பயிற்சிகளில் 2015 ஆம் ஆண்டு பெறும் பங்காற்றினார். எம்.எஸ் தோனி உட்பட பல பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியின் போது லெக் ஸ்பீன் மற்றும் கூக்லி விசியுள்ளார்.

இதனை உன்னிப்பாக கவனித்த பிக்ஷெல் சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெமிங்கிடம் அடுத்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட பரிந்துரைத்தார். அதன்படி 2016 ல் சிஎஸ்கே தடை காரணமாக புனே அணிக்கு பயிற்சியாளராக இருந்த ப்ளெமிங் ஏலத்தில் பெரிய தொகைக்கு எடுத்து ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஐபிஎல் தொடரில் முருகன் அஸ்வின்

முதல் ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் ஏழு விக்கெட் மட்டுமே விழ்த்தினார் எகானமி அதிகமாக இருந்தது. இதனால் அடுத்த வருடம் டெல்லிக்கு அணிக்காக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு ஒரு போட்டிகளில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018 இல் பெங்களுரு அணியில் இடம் பெற்றார் இங்கே இந்திய அணியில் விளையாடும் சாஹல் இருந்ததால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019 ஆம் வருடம் பஞ்சாப் அணியில் இடம் பெற்ற முருகன் அஷ்வின் 10 போட்டிகளில் 5 விக்கெட்கள் மட்டும் வீழ்த்தினாலும் எகனாமிகல் ரன்கள் கட்டுப்படுத்தும் பந்து வீச்சாளராக செயல்பட்டார். இந்த தொடரில் சுமாராக விளையாடியிருந்தாலும் இனி வரும் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார் என நம்புகிறோம்.

முருகன் அஸ்வினின் தந்தை இரா.முருகன் கோலிவுட்டில் புகழ்பெற்ற திரைக்கதை மற்றும் உரையாடல் எழுத்தாளர் ஆவார்.

Quick Links