ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு

Anil Kumble
Anil Kumble

டெஸ்ட் கிரிக்கெட் மூலம் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அடையாளம் காணப்படுகிறார். பேட்ஸ்மேனின் நிதானநிலை, பௌலரின் சீரான ஆட்டத்திறன் மற்றும் வெவ்வேறு கோணங்களில் பந்துவீசும் திறன் ஆகியன டெஸ்ட் கிரிக்கெட் மூலம் மட்டுமே சோதனை செய்து பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு வீரர் தொடர்ந்து 5 நாட்கள் விளையாட அவரது உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறதா என்பதை கண்டறியவும் டெஸ்ட் கிரிக்கெட் உதவுகிறது.

பெரும்பாலும் கிரிக்கெட்டில் 4 அல்லது 5 பௌலர்கள் வழக்கமான மெய்ன் வீரர்களாக இடம்பெறுவார்கள். இவர்கள் சொதப்பும் போது சில பகுதிநேர பௌலர்கள் பந்துவீச அழைக்கப்படுவார்கள். ஆனால் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்துள்ளனர்.

இந்நிகழ்வு முதல்முறையாக 1984ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது மூன்றாவது டெஸ்டில் நிகழ்ந்தது. அடுத்ததாக 1980ல் ஃபேய்ஸ்லாமபாத்-தில் நடந்த பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. மூன்றாவது நிகழ்வு 2002ல் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபபோது நடந்தது. கடைசியாக 2005ல் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களும் பௌலிங் செய்துள்ளனர்.

நாம் இங்கு 2002ல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதிய போட்டியில் நடந்ததைப் பற்றி காண்போம்.

India captain Sourav Ganguly used every bowler at his disposal including himself.
India captain Sourav Ganguly used every bowler at his disposal including himself.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்-ஐ தேர்வு செய்தது. இந்திய அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. சிவ் சுந்தர் தாஸ் 3 ரன்களில் வெளியேறினார். வாஸீம் ஜாஃபர் (87) ராகுல் டிராவிட்-வுடன் சேர்ந்து 144 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடினார்‌. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கோல்டன் டக் ஆனார். பின்னர் ராகுல் டிராவிட் மற்றும் சவ்ரவ் கங்குலி இணைந்து அந்த நாளில் அதற்கு மேல் விக்கெட்டை விட்டு தராமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

இரண்டாவது நாளின் ஆரம்பத்திலேயே சவ்ரவ் கங்குலி (45), ராகுல் டிராவிட் (91) மற்றும் அணில் கும்ளே (6) ஆகியோர் வீழ்த்தப்பட்டனர். ஆனால் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா மற்றும் VVS லக்ஷமன் ஆகிய இருவரும் இணைந்து 8வது விக்கெட்டிற்கு 205 ரன்கள் குவித்ததன் மூலம் 2வது நாள் ஆட்டம் இந்தியா பக்கம் சாதகமாக இருந்தது.

அடுத்த நாள் ஆரம்பத்தில் VVS லக்ஷமன்(130) ஆரம்பத்திலேயே வீழ்த்தப்பட்டார். விக்கெட் அஜய் ரத்ரா நிதானமாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். மேலும் கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் இனைந்து 40 ரன்கள் சேர்த்தார். இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 513 ரன்கள் எடுத்திருந்தபோது கங்குலி டிக்ளர் செய்தார்.

கிறிஸ் கெய்ல் மற்றும் வேவெல் ஹிண்ட்ஸ் ஆகியோர் இந்த ஆடுகளம் பௌலர்களுக்கு சாதகமானதல்ல என்பதை நன்கு அறிந்தவர்கள். எனவே மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டரை நாட்கள் இந்தியா பேட்டிங் செய்ததை கண்ட மேற்கிந்தியத் தீவுகள் தானும் அவ்வாறு செயல்பட முயன்றனர். ஜாஹீர் கான் விக்கெட் கணக்கை கிறிஸ் கெய்ல் (32) மூலம் தொடங்கி வைத்தார். ராம்நரேஷ் சர்வான் மற்றும் வேவெல் ஹிண்ட்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷீப் இந்திய அணியை பாதிக்கும் என எதிர்பார்த்தபோது சச்சின் டெண்டுல்கர் தனது சுழலில், நன்றாக நிலைத்து விளையாடிக் கொண்டிருந்த வேவெல் ஹிண்ட்ஸ்-ஐ 65 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியன் அனுப்பினார். அதன்பின் களம் கண்ட பிரைன் லாரா-வை அணில் கும்ளே 4 ரன்களில் வீழ்த்தினார். ஆனால் கார்ல் ஹேப்பர் மற்றும் ராம்நரேஷ் சர்வான் இருவரும் சேர்ந்து அந்நாளில் அதற்கு மேல் விக்கெட் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர்.

Wasim Jaffer had dream bowling figures of 2/18.
Wasim Jaffer had dream bowling figures of 2/18.

அடுத்த நாளின் முதல் இன்னிங்சில் ராம்நரேஷ் சர்வான்(51) வீழ்த்தப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளுக்கு 196 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டம் இந்திய வசம் இருப்பதுபோல் தெரிந்தது‌. ஆனால் ஷீவ்நரைன் சந்தர்பால் களம் கண்டு இந்திய அணியின் நம்பிக்கையை உடைத்தார். ஹூப்பர் மற்றும் சந்தர்பால் இணைந்து மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய வேகப்பந்து முப்படையான ஜவஹால் ஶ்ரீ நாத், ஜாஹீர் கான், ஆஸீஸ் நெக்ரா ஆகியோர் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களை வீழ்த்த பலவாறு முயற்சி செய்தனர். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் ஃபிளாட் ஆடுகளத்தில் நன்றாக விளையாட ஆரம்பித்தது. பின்னர் சச்சின் டெண்டுல்கர் மீண்டுமொருமுறை கேப்டன் கார்ல் ஹூப்பர்-ஐ 136 ரன்களில் வீழ்த்தினார்.

இந்த விக்கெட்டிற்கு பின் களமிறங்கிய ரைட் ஜேக்கோப்ஸை ஆரம்பத்திலேயே வீழத்தி, கடைநிலைபேட்டிங்கை சொற்ப ரன்களில் வீழ்த்தி 460 ரன்களில் கட்டுபடுத்தி ஒரு நல்ல முன்னிலையில் இந்தியா இருக்க நினைத்திருந்தது. ஆனால் ஜேக்கோப்ஸ் மிகவும் அதிரடியாகவும், சந்தர்பால் தடுத்தும் விளையாடி வந்தனர். அந்த சமயத்தில் கங்குலியிடம் யாரை பந்துவீச செய்வது என் விளங்காமல், அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் பந்துவீச செய்வதன முடிவு செய்தார். விக்கெட் கீப்பர் அஜய் ரத்ராவும் பௌலிங் செய்ய அழைக்கப்பட்டார். இவர் பந்துவீசும்போது ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக இருந்தார்.

அனுபவம் மற்றும் அனுபவமில்லா பௌலர்களுள், இந்திய தடுப்பு சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஜேக்கோப்ஸை (118) வீழ்த்தி இந்திய ரசிகர்கள் முகத்தில் புன்னகை தவளச் செய்தார்.

இந்த விக்கெட்டிற்குப் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடவில்லை. மெர்வின் தில்லன் மற்றும் பென்ரோ காலின்ஸ் ஆகிய இருவரும் வாஸீம் ஜஃபரால் வீழ்த்தப்பட்டார். அடுத்ததாக கடைசி பேட்ஸ்மேன் கேம்ரூன் கஃபீ-ஐ VVS லக்ஷ்மன் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் இறுதி ஸ்கோர் நிலவரம்

இந்தியா 513/9, மேற்கிந்தியத் தீவுகள் 629/9

முடிவு: டிரா

ஆட்டநாயகன்: அஜய் ரத்ரா (இந்தியா)

இப்போட்டியில் இந்திய பௌலிங் வரிசை:

Bowling scorecard (Image courtesy: espncricinfo.com)
Bowling scorecard (Image courtesy: espncricinfo.com)

Quick Links