ஷீகார் தவானிற்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் இந்திய உலகக் கோப்பை அணியில் சேர்ப்பு

Rishap Pant
Rishap Pant

இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிற்கு அதிர்ஷ்டம் அவரை சுற்றி உள்ளது. ஷீகார் தவானிற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார காயம் காரணமாக அவருக்கு மாற்று வீரர் என எவரேனும் இடம்பெறுவார்களா என்ற விவாதம் எழுந்த வந்தது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரிஷப் பண்ட் இங்கிலாந்திற்கு பயனம் செய்து இந்திய உலகக் கோப்பை அணியுடன் இணைய உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் ஷீகார் தவானிற்கு காயம் குணமடையும் வரை மாற்று வீரராக வீரராக அணியில் இருப்பார்.

36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வென்ற போது தவானிற்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்தின் போது நெதன் குல்டர் நில் வீசிய பந்து நேரடியாக அவரது கட்டை விரலை தாக்கியதன் காரணமாக இந்த காயம் ஏற்பட்டது. இதனால் இவருக்கு மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. இந்த காயம் ஏற்பட்ட பின் தவான் அதிகம் தடுமாறினார். இருப்பினும் நிலைத்து விளையாடி சதம் விளாசினார். இவர் 109 பந்துகளில் 117 ரன்களை குவித்திருந்த போது எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்தார். தவான் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. ரவீந்திர ஜடேஜா அந்த இன்னிங்ஸ் முழுவதும் ஃபீல்டிங் செய்தார்.

தவானிற்கு 3 வார ஓய்வு தேவை என கூறப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அணி நிர்வாகம் தவானிற்கு மாற்று வீரர் என யாரும் இல்லை என கூறியிருந்தது. ஆனால் தற்போது ரிஷப் பண்டை தவானிற்கு மாற்று வீரராக 3 வாரங்களுக்கு அறிவித்துள்ளது. "டைம்ஸ் ஆஃப் இந்தியா" என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்திப்படி ரிஷப் பண்ட்-டிடம் ஆரம்பத்திலே இங்கிலாந்து கிளம்ப தயாராக இருக்குமாறு பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்ததாம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நாட்டிங்காமில் நடைபெற உள்ள நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் இணைவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற மாட்டார். தவான் ரூல்ட் அவுட் ஆகவில்லை. ஐசிசி விதிப்படி ரூல்ட் அவுட் ஆகியுள்ள வீரருக்கு மாற்று வீரரை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ரூல்ட் அவுட் ஆன வீரர் முழு உடற்தகுதியை அடைந்து விட்டார் எனில் மாற்று வீரர் அணியில் இடம்பெற முடியாது.

செய்தியாளர்களிடமிருந்து வந்த தகவலின்படி,

"ரிஷப் பண்டை சூழ்நிலைக்கு ஏற்ப முன் கூட்டியே காத்திருப்பு வீரராக இங்கிலாந்திற்கு அழைத்து உள்ளோம். தவானின் காயம் தொடரந்தால் உடனே ரிஷப் பண்டை இந்திய அணியில் இடப்பெறச் செய்வோம். இந்த தகவல் உறுதியானல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும்."

ரிஷப் பண்ட் முழு உத்வேகத்துடன் இங்கிலாந்து கிளம்பியுள்ளார்‌. இவர் தனது அதிகாரப்பூர்வ பயணப் பெட்டியுடன் டெல்லியிலிருந்து இங்கிலாந்து கிளம்பியுள்ளார்‌. தவானின் காயம் இந்திய அணிக்கு மிகுந்த சோதனையை ஏற்படுத்தியுள்ளது. அணி நிர்வாகம் அவருக்கு தற்போது மிகுந்த பக்கபலமாக உள்ளது. தவான் நலம் பெற இந்திய அணி தனது முழு பங்களிப்பையும் அளித்து வருகிறது.

தவான் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது,

ஸ்கேன் செய்து பார்த்ததில் தவானிற்கு மிகவும் சிறிய காயமே ஏற்பட்டுள்ளது. மருத்தவர்கள் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். விரலில் ஏற்பட்ட காயம் அவ்வளவு எளிதாக குணமடையாது. 10 முதல் 12 நாட்கள் இவருக்கு ஓய்வு தேவை. வரும் நாட்களில் இவரது நலம் பற்றிய தகவல்கள் வெளியாகும்.

ஷீகார் தவானிற்கு பதிலாக லோகேஷ் ராகுல், ரோஹீத் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். நம்பர் 4 பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறங்க வாய்ப்புள்ளது.

ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று 401 ரன்களை குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

Quick Links

Edited by Fambeat Tamil