சமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு

Jofra Archer
Jofra Archer

ஜோஃப்ரா ஆர்சர் 2019 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சஸ்செக்ஸ் என்ற கவுண்டி அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் டிவிட்டரில் வேடிக்கை விளையாட்டை ஒன்றை நிகழ்த்தி வந்தனர். ஜோஃப்ரா ஆர்சர் அவர்களின் விளையாட்டை தடுத்து நிறுத்தி சமதானப் படுத்தியுள்ளார். இதற்கு நடுவே ஆஸ்திரேலிய பிக்பேஸ் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ் இரு அணிகளையும் தூண்டும் வகையில் பதிலளித்துள்ளது.

ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்சருக்கு உலகக் கோப்பையில் இடம்பெற்றதிற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவு செய்திருந்தது. அந்த டிவிட்டில் 'எங்களுடைய வேகப்பந்து வீச்சு இயந்திரம்" என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கிடையில் ஜோஃப்ரா ஆர்சருக்கு முதன்முதலாக இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்க கவுண்டி கிரிக்கெட்டில் வாய்ப்பளித்த சஸ்செக்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் "எங்களுடைய வேகப்பந்து வீச்சு மெஷின் என்ற வார்த்தைக்கு டிவிட்டரில் பதிலளித்தது. இதற்கு நடுவே எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போல் ஹபர்ட் ஹாரிகேன்ஸ் அணி சிரிப்பது போன்ற சித்திரத்தை பதிவிட்டுள்ளது.

ஃபினிஷிங் திறனை அனைத்து இடங்களிலும் சிறப்பாக கையாலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் இந்த இரு அணிகளின் வேடிக்கை விளையாட்டை அமைதிபடுத்தினார். இந்த நிகழ்வை கண்டு ரசிகர்கள் நகைத்துள்ளனர். உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் இந்த இரு அணிகளின் வேடிக்கை விளையாட்டின் வெற்றியாளராக திகழ்கிறார். ஜோஃப்ரா ஆர்சர் நன்றாக விளையாடுகிறிர்கள் என பதிவு செய்து தலையில் அடித்து கொள்வது போல் ஒரு சித்திரத்தை பதிவிட்டிருந்தார். உடனே சஸ்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ், சஸ்செக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உடை அணிந்தவாறு ஒற்றுமை புகைப்படத்தை ஆர்ச்சருக்கு பதிலாக அளித்தது. உடனே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ், சசெக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆகிய 4 பேர் உள்ளவாறு ஒரு புகைப்படத்தை பதிவேற்றி வெளியிட்டது.

மே 21 அன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணகயில் ஜோஃப்ரா ஆர்சரை இணைத்தது. ஆர்ச்சர் ஆரம்பத்தில் இங்கிலாந்து உலகக் கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் சமீபத்தில் பாகிஸ்தானிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற வென்ற இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆர்ச்சர், டேவிட் வில்லிக்கு பதிலாக இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். டேவிட் வில்லி பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆர்ச்சருடன், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் லைம் டவ்சன் உலகக் கோப்பை அணியில் ஜோ டென்லிக்கு பதிலாக இடம்பெற்றுள்ளார். கடந்த மாதம் ஆக்டோபரில் நடந்த இலங்கை தொடரில் விளையாடிய லைம் டவ்சன் அதற்கு பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் இறுதி உலகக் கோப்பை பட்டியல்:

இயான் மோர்கன் (கேப்டன்), ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், லைம் பிளன்கட், டாம் கர்ரான், லைம் டவ்சன், ஜோஃப்ரா ஆர்சர், மாரக் வுட்.

Quick Links

Edited by Fambeat Tamil